ஆபாசப்பட டிவிடி கேசட்டுகளை அழித்த பெற்றோர் மீது மகன் வழக்கு!

உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்திற்காகவே நான் அவற்றை அழித்தேன். இதை நீ ஒரு நாள் புரிந்துக்கொள்வாய் என நம்புகிறேன் என்று தந்தை மகனுக்கு இ-மெயில் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

news18
Updated: April 15, 2019, 2:20 PM IST
ஆபாசப்பட டிவிடி கேசட்டுகளை அழித்த பெற்றோர் மீது மகன் வழக்கு!
ஆபாச டிவிடி
news18
Updated: April 15, 2019, 2:20 PM IST
அமெரிக்காவின் மிக்சிகன் நகரில், தனது ஆபாச டிவிடி சேகரிப்புகளை அழித்ததால் பெற்றோர் மீது 86,000 டாலர் நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2016-ம் ஆண்டு அமெரிக்க தம்பதிகள் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால், திருமணம் ஆன 10 மாதங்களில் அவர் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பெற்றோருடனே சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

பின்னர் பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர்களுடன் தங்க விருப்பமில்லமல் வேறு இடத்திற்கு தனது பொருட்களை எல்லாம் வீட்டிலிருந்து காலி செய்துக்கொண்டு சென்றுள்ளார்.


புதிய வீட்டிற்கு சென்ற உடன் அங்கு அவர் கொண்டு வந்த பொருட்களில் 12 பெட்டிகளை காணவில்லை.

முதலில் தனது பெற்றோர் மீது காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகாரை அவர்கள் ஏற்கவில்லை. பின்னர் தனது பெற்றோரை எதிர்த்து நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில் தான் சேகரித்து வைத்திருந்த அறிய வகையிலான ஆபாச டிவிடிகள் மதிப்பு 29,000 டாலரக்கும் மேலாக இருக்கும். அவற்றைத் தூக்கி எறிந்த தனது பெற்றோர்கள் 86,000 டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading...

தனது மகனுக்கு இதுகுறித்து விளக்கம் அளித்து மின்னஞ்சல் அனுப்பிய தந்தை, “உன்னுடையை உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்திற்காகவே நான் அவற்றை அழித்தேன். இதை நீ ஒரு நாள் புரிந்துக்கொள்வாய் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க:
First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...