HOME»NEWS»INTERNATIONAL»us man increases height from 511 to 61 after undergoing rs 55 lakh limb lengthening surgery vin ghta

தனது உயரத்தை 6'1" ஆக அதிகரிக்க ஆப்ரேஷன் செய்த நபர் - அமெரிக்காவில் வினோதம்!

தொடைஎலும்பு நீள ஆபரேஷன் பொதுவாக ஒரு மணி நேரம் நடக்கும், இதில் அறுவை சிகிச்சை நிபுணர் தொடையில் நான்கு முதல் ஆறு கீறல்களைச் செய்கிறார். இது கொஞ்சம் வேதனையாகத் தோன்றினாலும், உண்மையில் இது குறைவான வலியையே தரும் என்று அல்போன்சோ கூறினார்

தனது உயரத்தை 6'1" ஆக அதிகரிக்க ஆப்ரேஷன் செய்த நபர் - அமெரிக்காவில் வினோதம்!
தொடைஎலும்பு நீள ஆபரேஷன் பொதுவாக ஒரு மணி நேரம் நடக்கும், இதில் அறுவை சிகிச்சை நிபுணர் தொடையில் நான்கு முதல் ஆறு கீறல்களைச் செய்கிறார். இது கொஞ்சம் வேதனையாகத் தோன்றினாலும், உண்மையில் இது குறைவான வலியையே தரும் என்று அல்போன்சோ கூறினார்
  • News18
  • Last Updated :
  • Share this:

உயரமாக இருக்க வேண்டும் என்று கனவு பலருக்கும் இருக்கும், மூட்டு நீள அறுவை சிகிச்சைக்கு (limb-lengthening surgery) செலவழிக்க உங்களிடம் போதுமான பணம் இருந்தால் இந்த கனவை நனவாக்கலாம். டெக்சாஸின் (Texas) டல்லாஸில் (Dallas) 28 வயதான ஒரு நபர் தனது உயரத்தை அதிகரிக்க ஒரு மாற்று அணுகுமுறையை மேற்கொண்டுள்ளார், தனது பேவரட் பேஸ்கெட்பால் ஹீரோக்களான கோபி பிரையன்ட், மைக்கேல் ஜோர்டான் மற்றும் பில் ஜாக்சன் (Kobe Bryant, Michael Jordan and Phil Jackson) போன்றவர்களை போல் தானும் உயரமாக வேண்டும் என்ற தனது குழந்தை பருவ கனவை இப்போது நிறைவேற்றியுள்ளார். 

அல்போன்சோ புளோரஸ் (Alfonso Flores) தனது உயரத்தை 5 அடி 11 அங்குலத்திலிருந்து 6 அடி 1 அங்குலமாக உயர்த்த காஸ்மட்டிக் மூட்டு நீள அறுவை சிகிச்சைக்கு (cosmetic limb-lengthening surgery) உட்படுத்தப்பட்டார். லாஸ் வேகாஸில் உள்ள தி லிம்ப் பிளாஸ்ட்எக்ஸ் இன்ஸ்டிடியூட்டின் (LimbplastX Institute in Las Vegas) ஹார்வர்ட் பயிற்சி (Harvard-trained) பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கெவின் டெபிபர்ஷாத் (orthopaedic surgeon, Dr Kevin Debiparshad) இந்த ஆபரேஷனை செய்துள்ளார். 

அல்போன்சோ, டெய்லி மெயில் செய்திக்கு (Daily Mail) பேட்டியளித்தபோது, அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இது ஒரு 'தேவையற்ற' சிகிச்சை என்றும் இதில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் கூறினர், ஆனால் அவர் 12 வயதிலிருந்தே உயரமாக இருக்க விரும்பியதால் அதற்கான முன்னெடுப்புகளை செய்துகொண்டுதான் இருந்தார். இப்போது, அறுவை சிகிச்சை செய்து ஏழு மாதங்கள் ஆகின்றன. அவர் எதிர்பார்த்தபடி இறுதியாக தனது கனவை அடைந்துள்ளார். இந்த ஆபரேஷனை பற்றி அல்போன்சோவின் குடும்பத்தார் மற்றும் சொந்தங்களுக்கு இது மிகவும் 'பாதுகாப்பானது' என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்திய பின்னர் தான், பலருக்கும் நம்பிக்கை வளர்ந்தது. 



இந்த ஆபரேஷனுக்கான செலவு $75,000 ஆக தொடங்கி திபியா-நீள அறுவை சிகிச்சைக்கு (tibia-lengthening surgery), $84,000 வரை செலவாகிறது. ஒரு வருடமோ அல்லது இரண்டு வருட ஆபரேஷனுக்குப் பிறகு, நோயாளிகள் தங்கள் கால்களிலிருந்து நகங்களை அகற்ற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு வழக்கமாக $14,000 முதல்  $20,000 வரை செலவாகும். அல்போன்சோ டெய்லி மெயிலிடம் 5'11” என்பதே அதிகமான உயரம் தான் என்று எனக்கு தெரியும் இருந்தும் நான் அதைவிட உயரமாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார். தான் 6’1”க்கு செல்ல முடிவு செய்ததற்குக் காரணம், தான் தனது விளையாட்டுத் திறனை முடிந்தவரை தக்க வைத்துக் கொள்ள விரும்பியதால் தான் இத்தகைய முடிவை தான் எடுத்துள்ளதாக கூறினார். 

இந்த ஆபரேஷன் குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் சந்தேகம் குறித்து கருத்து தெரிவித்த அல்போன்சோ புளோரஸ் (Alfonso Flores), இது ஒரு க்ரேஸியான முடிவு என்று அவர்கள் நினைத்ததாக கூறினார். 

Also read... இட்லிகள், ஷூக்கள், வெற்றி உரைகள்... கமலா ஹாரிஸ் இந்தியாவில் தலைப்பு செய்தியாக வலம் வந்த தருணங்கள்..

அறுவை சிகிச்சையின் மறுநாளே அல்போன்சோ தனது சாதாரண பணியைத் தொடங்கினார், இப்போது ஏழு மாதங்கள் ஆகிவிட்டது தான் விரும்பிய உயரத்தை அடைந்து இப்போது ஹாப்பியாக உணர்வதாக அல்போன்சோ கூறியுள்ளார். டாக்டர் டெபிபர்ஷாத், ஆபரேஷனை பற்றி விளக்கும் போது, இது நபரின் உயரத்தை அதிகரிக்க கைகால்களில் ஆபரேஷன் செய்வது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறை என்று கூறினார். 

இந்த தொடைஎலும்பு நீள ஆபரேஷன் பொதுவாக ஒரு மணி நேரம் நடக்கும், இதில் அறுவை சிகிச்சை நிபுணர் தொடையில் நான்கு முதல் ஆறு கீறல்களைச் செய்கிறார். இது கொஞ்சம் வேதனையாகத் தோன்றினாலும், உண்மையில் இது குறைவான வலியையே தரும் என்று அல்போன்சோ கூறினார். தி லிம்ப் பிளாஸ்ட்எக்ஸ் இன்ஸ்டிடியூட்டை தான் கண்டுபிடித்த பிறகு, டாக்டர் டெபிபர்ஷாத்துடன் ஆலோசித்ததாகவும், பின்னர் மூன்று வாரங்களுக்குள், தான் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு "ஆபரேஷன் ரூமில்" தான் இருந்ததாக அல்போன்சோ கூறினார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: