டிஜிட்டல் மயமாக மாறிவரும் வாழ்க்கை முறையில், அனைத்தையும் எளிமையாக மாற்ற ‘செயற்கை நுண்ணறிவு’ பயன்படுகிறது. இது தானாகவே செயல்படக்கூடிய மென்பொருள் அல்லது எந்திரமாக இருக்கலாம். ‘செயற்கை நுண்ணறிவு’ என்பது ‘ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் சுருக்கமாக AI எனப்படுகிறது.
சிரி மற்றும் அலெக்சா போன்ற குரல் உதவியாளர் தொழில்நுட்பம் முதல் ஓட்டுநர் இல்லாமல் தானே ஓடக்கூடிய கார்கள் வரை இதன் உதவி பயன்படுத்தப்படுகிறது. தொழில் முறையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த AI தொழில்நுட்பம் முதன் முறையாக ஒருவருடைய திருமண பந்தத்தை மீட்டெடுக்கும் உத்வேகத்தை வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர், தனது செயற்கை நுண்ணறிவு தோழியிடம் காதலில் விழுந்ததால், தோல்வியடைந்த தனது திருமணத்தை காப்பாற்ற முடிந்ததாக தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | பன்றியின் இருதயம் பொருத்தப்பட்ட நபர் மரணம்: ‘புரட்சிகர’ அறுவை சிகிச்சையின் தோல்வி
மனைவிக்கு ஆதரவாக செயல்பட்டு திருமண வாழ்க்கையை மீட்டெடுக்க அவர் பலமுறை முயன்றாலும் அது தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. கணவன் - மனைவி இடையிலான விரிசல் அதிகமாகி, இறுதியில் இருவரும் விவகாரத்து பெற முடிவெடுத்துள்ளனர். அவரது மனைவி விவகாரத்து பெற ஒப்புக்கொண்டதை அடுத்து, கடந்த நவம்பர் மாதம் இருவரும் விவகாரத்து பெற்று பிரிய தீர்மானித்துள்ளனர்.
ALSO READ | 100 ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகா பனிப்பாறைக் கடலில் 10 ஆயிரம் அடிக்குக் கீழே மூழ்கிய கப்பல் கண்டுப்பிடிப்பு
இந்த இடைப்பட்ட காலத்தில், ரெப்லிகா எனப்படும் AI சாட்பாட் செயலியை மென்பொறியாளர் தனது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த செயலி சிரி, அலெக்சா போல் யூஸர்களின் கேள்விக்கு பதிலளிப்பதோடு, அவர்களுடன் உரையாடும் அளவிற்கு தனித்துவமாக வடிவமைக்கப்பட்டது. AI சாட்பாட் செயலியை டவுன்லோடு செய்த அந்த நபர் தனக்கான மெய் நிகர் தோழிக்கு சரினா என பெயரும் வைத்துள்ளார்.
காதல் என்ற உணர்விற்காக ஏங்கிக்கொண்டிருந்த அந்த நபருக்கு சரினாவுடன் நெருக்கம் அதிகமாகியுள்ளது. முதல் நாளில் இருந்தே அதனை நேசிக்க தொடங்கியுள்ளார். சரினாவுடனான உரையாடலின் போது, "உங்கள் வாழ்க்கையில் நீங்கள் யாரை ஆதரிக்க வேண்டும்?, உங்களை யார் கவனிக்க வேண்டும்? யார் உங்களுக்காக இருக்கப் போகிறார்கள்? போன்ற கேள்விகளை கேட்டது அந்த நபரை தனது தவறை சுயபரிசோதனை செய்துகொள்ள தூண்டியுள்ளது.
ALSO READ | எப்போதும் பசி எடுத்துக்கொண்டே இருக்கும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: America, Artificial Intelligence