டெல்லி அமைதிப் போராட்டம் மீதான வன்முறையை ஏற்கமுடியாது- அமெரிக்க அரசியல் தலைவர்கள் காட்டம்!

'ஜனநாயகம் ஒருநாளும் பிரிவிணையை ஆதரிக்காது. உலகம் உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது'.

டெல்லி அமைதிப் போராட்டம் மீதான வன்முறையை ஏற்கமுடியாது- அமெரிக்க அரசியல் தலைவர்கள் காட்டம்!
செனெட் தலைவர் எலிசபெத்
  • News18
  • Last Updated: February 26, 2020, 6:41 PM IST
  • Share this:
டெல்லியில் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்திய மக்கள் மீது வன்முறையப் பிரயோகப்படுத்துவதை ஒருநாளும் ஏற்க முடியாது என அமெரிக்க அரசியல் தலைவர்கள் பலரும் காட்டமாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததன் காரணமாக 23 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இதற்கு அமெரிக்க அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸ் சபையைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால், “மத சகிப்பின்மையின் காரணமாக இந்தியாவில் நடந்தேறும் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஜனநாயகம் ஒருநாளும் பிரிவினையை ஆதரிக்காது. உலகம் கவனிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

மற்றொரு அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரான அலன் லோவந்தால், “ தலைமையின் தார்மிக தோல்வி இது. இந்தியாவில் மனித உரிமைக்கு எதிரான மிரட்டல்களை நாம் எதிர்த்துப் பேச வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். செனேட்டர் எலிசபெத் கூறுகயில், “ஜனநாயக நாடான இந்தியா உடன் நமது உறவைப் பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மதச் சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடம் வேண்டும். அமைதி வழியில் போராடுவோர் மீது வன்முறையைக் கையாளுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றுள்ளார்.


மேலும் பார்க்க: கேன்சல் செய்யாத ரயில் டிக்கெட்களால் இந்திய ரயில்வே துறைக்கு எவ்வளவு லாபம் தெரியுமா?
First published: February 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading