• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இனி அமெரிக்காவிலும் தீபாவளிக்கு பொது விடுமுறை - அமெரிக்க சட்டசபையில் மசோதா தாக்கல்!

இனி அமெரிக்காவிலும் தீபாவளிக்கு பொது விடுமுறை - அமெரிக்க சட்டசபையில் மசோதா தாக்கல்!

மாதிரி படம்

மாதிரி படம்

வரும் புதன்கிழமை அன்று நியூ யார்க்கில், இந்திய வம்சாவளி எம்பிக்களான காங்கிரஸ்மென் கண்ணா, காங்கிரஸ் ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் இவர்களின் வழக்கறிஞர்களும் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
இந்தியாவில் நாடு முழுவதும் கொண்டாடப் ஒரு மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அதைப்போலவே, கிழக்காசிய நாடுகளிலும் தீபாவளி விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று குடியேறிய இந்திய வம்சாவழியினர் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வசித்துவருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களும் இந்திய வம்சாவளியினரும் வசித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்தியர்களால் இந்திய பண்டிகைகள் எல்லைகளின்றி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை, அதன் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபாவளியை பொது விடுமுறையாக அறிவிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கரோலின் மலோனி முடிவு செய்துள்ளார். கரோலின் மலோனி ஒரு காங்கிரஸ்விமன் என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்தியாவில் வாழ்வது போல அமெரிக்காவிலும் பல மதத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்கின்றனர். அதுமட்டுமின்றி அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். தீபாவளி பண்டிகையை இங்கு பொது விடுமுறையாக அறிவிப்பது அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும்" என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்திற்கு அமெரிக்க வாழ் இந்திய எம்பிக்களாக இருப்பவர்கள் அனைவருமே எந்த கருத்து வேறுபாடும் இன்றி ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் புதன்கிழமை அன்று நியூ யார்க்கில், இந்திய வம்சாவளி எம்பிக்களான காங்கிரஸ்மென் கண்ணா, காங்கிரஸ் ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் இவர்களின் வழக்கறிஞர்களும் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அமெரிக்காவில் வாழும் கணிசமான அளவிலான இந்தியக் குடும்பங்கள் தீபாவளியை குதூகலத்துடன் விமரிசையாக கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அதிகாரப்பூர்வமான விடுமுறையாக அறிவிக்கப்படாமல் இருந்தாலும், அமெரிக்காவின் முக்கியமான இடங்களில், பண்டிகையின் முக்கியத்துவத்தை முன்னிட்டு பல இடங்களிலும் வண்ண விளக்குகளும், அலங்காரங்களும் கண்ணைப் பறித்தன. குறிப்பாக, அமெரிக்காவின் அடையாளங்களில் ஒன்றான 102 மாடிகள் கொண்ட எம்பயர் ஸ்டேட் பில்டிங் முழுவதுமே ஆரஞ்சு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தை சிறப்பித்தது.

Also read... தீபாவளி ஸ்பெஷல் - உங்களுக்கு பிடித்தவர்களுக்கு இந்த ‘கிஃப்ட்ஸ்’ கொடுத்து அசத்துங்கள்!

மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, இந்த ஆண்டு அமெரிக்க பாராளுமன்றத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு முக்கியமான காரணமாக இருக்கும் மலோனி, இதுகுறித்து பேசுகையில் “நாம் செய்யும் சிறிய செயல் கூட, அதைச் சார்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.

இந்திய-அமெரிக்க சமூக உறுப்பினர்கள் சங்கத்துக்காக, இந்தியாஸ்போறா அமைப்பு அமெரிக்கவில் வாழும் இந்தியர்களுக்காக, இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்காக இந்திய பண்டிகைகளுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் நிர்வாக இயக்குனரான சஞ்சீவ் ஜோஷி பூரா, அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள் சேவைகளுக்காக ஆதரவளிப்பதாக காங்கிரஸ் பெண்மணியான கரோலின் மலோனியுடன் இணைவார் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு, தீபாவளி சிறப்புத் தபால் தலை வெளியீடு மலோனியின் முயற்சியால் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: