ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நடத்திய நடத்திய தாக்குதலில் ஈராக் ராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு களத்தில் உள்ளன. இதில் அமெரிக்க படை வீரர்களை குறிவைத்து அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாக்தாத்தில் ஏவுகணைக் கிடங்கை குறிவைத்து அமெரிக்கப் படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 5 ராணுவ வீரர்களும் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். சமீபத்தில் அமெரிக்க கூட்டுப் படைகளின் மீது நிகழ்த்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 14 பேர் படுகாயமடைந்தனர். இதற்கு பதிலடியாக தற்போது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த தகவலை அமெரிக்க ராணுவமும், இங்கிலாந்து ராணுவமும் உறுதிப்படுத்தி உள்ளன. அதே சமயம் இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also see...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.