Home /News /international /

போர் பதற்றம்: உக்ரைனில் உள்ள தூதரகத்தை மூட அமெரிக்கா முடிவு!

போர் பதற்றம்: உக்ரைனில் உள்ள தூதரகத்தை மூட அமெரிக்கா முடிவு!

போர் மூள்வதை தடுக்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரேனும் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலை பேசி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

போர் மூள்வதை தடுக்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரேனும் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலை பேசி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

போர் மூள்வதை தடுக்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரேனும் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலை பேசி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

    உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால் அந்நாட்டில் செயல்பட்டு வரும் தூதரகத்தை மூட அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

    அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் ஆர்வம் காட்டிவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, ஒரு லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை உக்ரைன் நாட்டின எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யா- உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், எந்த நேரத்திலும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறினார். இதனால் அங்குள்ள அமெரிக்கர்கள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பணியாளர்கள் ஏராளமானோர் ஏற்கெனவே நாடு திரும்பி விட்ட நிலையில் ஞாயிற்றுக் கிழமை முதல் தூதரகம் மூடப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க - ரஷ்யா தாக்குதல் அச்சம்... உக்ரைனில் இருந்து உடனே வெளியேறுங்கள்: அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை கெடு

    உக்ரைனின் மேற்கு பகுதி நகரமான லிவ்-வில் மிகக் குறைந்த பணியாளர்களுடன் தூதரகம் இயங்கும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது. போர் மூள்வதை தடுக்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரேனும் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலை பேசி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

    முன்னதாக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட டிரான்ஸ் அட்லாண்டிக் நாடுகளை சேர்ந்த தலைவர்களுடன் அதிபர் பைடன் உக்ரைன் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் கடுமையான பொருளதார தடைகளை விதிக்க தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக 3 ஆயிரம் ராணுவ வீரர்களை உக்ரைன் எல்லைக்கு அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

    இதையும் படிங்க - பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது - பிரதமர் மோடி!

    இதனிடையே மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் உக்ரைனில், காவல்துறையினர் போர் பயிற்சி மேற்கொண்டனர். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள கிரைமியாவிற்கு 30 கிலோ மீட்டர் தொலைவில் காவல்துறையினர் பயிற்சியில் ஈடுப்பட்டனர்.

    சூழ்நிலையை சீர்குலைக்கும் காரணிகளுக்கு சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பயிற்சியில் ஈடுப்பட்டனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: America, Russia - Ukraine

    அடுத்த செய்தி