டிக் டாக்: டிரம்ப் உத்தரவுக்கு இடைக்காலத் தடை...விரைவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்க அறிவுறுத்தல்

டிக் டாக்: டிரம்ப் உத்தரவுக்கு இடைக்காலத் தடை...விரைவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்க அறிவுறுத்தல்

அதிபர் டிரம்ப்

அமெரிக்க நிறுவனங்களுக்கு செயலியை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும், பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

 • Share this:
  டிக்-டாக் செயலிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்திருந்த தடையை, அந்நாட்டு ஃபெடரல் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

  அமெரிக்கர்களின் தகவல்களை உளவு பார்ப்பதாகவும், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் குறிப்பிட்டு, அந்நாட்டு அதிபர் டிரம்ப் டிக் டாக் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து வாஷிங்டன் மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

  ALSO READ | ஆக்ஸ்போர்ட் தயாரித்த கொரோனா தடுப்பூசி சோதனை தமிழகத்தில் மீண்டும் தொடக்கம் 

  இதனை விசாரித்த நீதிபதி கார்ல் நிகோலஸ், அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.


  எனினும் அமெரிக்க நிறுவனங்களுக்கு செயலியை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும், பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
  Published by:Sankaravadivoo G
  First published: