அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்

பதவிப் பிரமாணம் செய்யும் கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றார். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆவார்.

 • Share this:
  உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். துணை அதிபராக சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார்.

  கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய வெற்றியை இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பெரிதும் கொண்டாடினர். அதனால், அவருடைய பதவியேற்பு விழாவுக்கு தமிழ்நாட்டிலும் எதிர்பார்ப்பு இருந்தது.

  பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய நேரப்படி இரவு 10.10 மணி அளவில் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றார். அவருக்கு, உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: