ஏர் இந்தியா விமானங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா - இந்திய அரசு மீது குற்றச்சாட்டு

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், இந்திய அரசு மீதும் குற்றம்சாட்டியுள்ளது.

ஏர் இந்தியா விமானங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா - இந்திய அரசு மீது குற்றச்சாட்டு
விமான சேவை பாதிப்பு
  • Share this:
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் முயற்சியாக ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்தநிலையில், அமெரிக்காவுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவில் சிக்கியுள்ளவர்களை திரும்ப அழைத்துச் செல்வதற்கு வரும் ஏர் இந்தியா நிறுவன விமானத்துக்கு அனுமதி பெறுவதற்கு 30 நாள்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். இந்தியாவிலிருந்தும், இந்தியாவுக்கும் பயணிகளைக் கொண்டு செல்லும் அமெரிக்க விமானச் சேவையை இந்திய அரசு பலவீனப்படுத்தியதே, இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு காரணம்.

மேலும் சிறப்பு விமானங்கள் இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தையும் தாண்டி வணிக ரீதியாகச் செயல்படுகிறது. இந்தியர்களை அழைத்துச் செல்லும் பேரில் ஏர் இந்தியா பல்வேறு வணிக ரீதியான போக்குவரத்துச் செயல்களிலும் ஈடுபடுகிறது. பல விதங்களில் அமெரிக்காவின் விமானச் சேவை கட்டுப்பாடுகளை மீறி வருகிறது.


இதனையடுத்து சிறப்பு விமானங்களை இயக்குவதற்கு முன் இந்தியா இனி போக்குவரத்துத் துறையிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். எனவே அதன் செயல்பாடுகளை தீவிரமாகக் கண்காணித்து அனுமதிக்க முடியும்.

அமெரிக்க விமானங்கள் மீதான இந்தியக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட பிறகு இந்திய விமானம் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது பற்றி பரிசீலிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஜூன் 12 முதல் ஜூலை 2-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கு 96 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்தக் கட்டுப்பாடுகளால் இந்த விமானத்துக்கு எந்த சிக்கலும் இருக்காது என்று தெரிகிறது.
First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading