அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி ஆசியச் சுற்றுப் பயணமாகத் தைவானுக்குச் சீனாவின் எதிர்ப்பை மீறி சந்தித்த நிலையில் சீனா அதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தைவான் அதிபர் ட்சாய் இங் வென்னை நான்சி பெலோசி சந்தித்துள்ளார்.
தைவான் தனித்துவமாக ஜனநாயகத்துடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறபோதிலும் தனி நாடக அங்கீகரிக்கப்படவில்லை. சீனா, தைவான் மேல் அங்கீகாரம் கொண்டு சுதந்தர நாடக அங்கீகரிக்காமல் உலக நாடுகளிடமிருந்து தனிமைப் படுத்துவதாக உலக நாடுகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தைவானில் அதிபர் ட்சாய் இங் வென்னை சந்தித்துக் கலந்துரையாடிய நான்சி பெலோசி, தைவானின்
ஜனநாயகத்தை அமெரிக்கா ஆதரிக்கும், தைவானுடன் அமெரிக்கா நிற்கும் என்று கூறியுள்ளார்.
Also Read : சீனா எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்... வர்த்தக போர் மூண்டது
நான்சி பெலோசி மற்றும் அதிபர் ட்சாய் இங் வென் சந்திப்பு ஒரு நட்பு ரீதியான, இரு நாடுகளுக்கு இடையில் உறவை மேம்படுத்த உதவும் என்றும், பொருளாதாரம், ஜனநாயகம், பசிபிக் பகுதி உறவு முறை போன்றவற்றை கலந்துரைப்பதற்காக என்று கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு தைவானுடன் உள்ள நட்பை மேம்படுத்தியுள்ளது என்றும் இந்த சந்திப்பு மிகவும் நன்றாக அமைந்தது என்று அமெரிக்கா சபாநாயகர் நான்சி தெரிவித்துள்ளார். மேலும் தைவான் முக்கிய தலைவர்களான சட்டமன்ற யுவான் ஜனாதிபதி யு சி குன்னை காணொளி வழியாகவும், சட்டமன்ற யுவான் துணை ஜனாதிபதி ட்சாய் சி சாங்யை நேரிலும் சந்தித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து தைவானின் தேசிய மனித உரிமைகள் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அங்குத் தைவானின் ஜனநாயகத்திற்காகப் போராடிய வீரர்களுக்கு மரியாதையைச் செலுத்துவதாகப் பதிவிட்டிருந்தார். சந்திப்பு நன்றாக முடிந்த நிலையில் நான்சி பெலோசி தைவானிலிருந்து கிளம்பியுள்ளார்.
இந்த சந்திப்பைப் பற்றி நான்சி பெலோசி, இருநாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவை அதிகரிக்க, பாதுகாப்பை மேம்படுத்த மேலும் இருநாட்டிற்கும் இடையே உள்ள ஜனநாயகத்தை வரையறுக்கக் கலந்துரையாடப்பட்டது என்று புறப்படும் முன் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.