அமெரிக்கா நாட்டின் சபாநாயகரான நான்சி பெலோசி சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் நாட்டின் தரையிறங்கியுள்ளார். இதனால் உலகரங்கில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் சீனா இதனை எதிர்த்து தைவானுக்கு எதிராகப் போர் கொடி உயர்த்தியுள்ளது.
சீனா தைவானை தங்களுடன் இணைத்து உரிமை கொண்டாடி வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் தைவான் தனித்துவமாகச் செயல்பட்ட போதிலும் சீனா உரிமை ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. மேலும் அதை உலகரங்கில் வெளிப்படுத்தி வருகிறது. கடந்த காலமாக சீனா, ராணுவ பலத்தை உறுதிப்படுத்தி ஆசியக் கண்டத்தில் மட்டுமல்லாமல் உலகளவில் தன்னுடைய அதிகாரத்தை முன்னிலைப்படுத்த முயல்கிறது.
இந்தநிலையில் தற்போது சீனாவிற்கு எதிர் நிலைப்பாடு கொண்டுள்ள அமெரிக்காவின் முக்கிய சபாநாயகரான நான்சி பெலோசி ஆசியச் சுற்றுப்பயணத்தில் தைவானுக்குச் செல்வதாக அறிவித்திருந்தார். இதற்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நான்சி பெலோசி எதிர்ப்பையும் மீறி செவ்வாய்க்கிழமை இரவு மலேசியாவிலிருந்து புறப்பட்டு தைவான் சென்றுள்ளார் . இந்த செயல் உலகரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனா வெளியுறவுத் துறை நள்ளிரவே அமெரிக்கத் தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸ்க்கு அழைப்பு விடுத்து, இந்த செயலினால் அமெரிக்கா பெரும் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளதாகச் சீனா ஊடகம் குறிப்பித்துள்ளது.
நான்சி பெலோசி வந்த விமானத்திற்குக் காவலாகத் தைவான் போர் விமானம் சென்றது இன்னும் பதற்றத்தை அதிகரித்தது. இதற்குப் பதிலடியாக சீனா ராணுவத்தின் விமானங்கள் தைவான் வான் வெளியில் நுழைந்தது. தைவான் விஷயத்தில் தலையிடுவது தீயுடன் விளையாடுவதற்குச் சமம் என்று சீனா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.