அமெரிக்காவில் கொரோனா பரவல் பாதிப்பு உயர்ந்து காணப்படும் சூழலில் நர்சுகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், பிற நாடுகளின் நர்சுகளை அமெரிக்கா நாடியுள்ளது.
உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தினசரி பாதிப்பும் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 2.55 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாம சுகாதார கட்டமைப்பும் முடங்கியுள்ளது. இந்த சூழலில் பல நர்சுகள் விருப்ப ஓய்வில் பெற்றதோடு பலர் விடுப்பிலும் சென்றுவிட்டனர்.
இதனால் நர்சுகளுக்கான தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. நெப்ராஸ்காவின் ஒமாஹாவில் உள்ள குடியேற்ற வழக்கறிஞரான ஏமி எல். எர்ல்பேச்சர்-ஆன்டர்சன், தனது 18 ஆண்டுகால சேவையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டு நர்சுகளுக்கான தேவையை அதிகமாகக் கண்டதாகக் கூறினார். மேலும், அமெரிக்காவிற்குச் செல்ல விரும்பும் நர்சுகள் உட்பட வெளிநாட்டு நிபுணர்களுக்கு இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான கிரீன் கார்டுகள் வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் மட்டுமே தேவையைவிட 40 ஆயிரம் நர்சுகள் அல்லது 14 சதவீத பணியிடங்கள் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. சில ஆஸ்பத்திரிகளில் பிலிப்பைன்ஸ், ஜமைக்கா மற்றும் ஆங்கிலம் பேசுகிற பிற நாடுகளில் இருந்து நர்சுகளை வரவழைக்கின்றனர். எனினும் இதற்கான செலவீனம் அதிகமாக உள்ளது.
இதையும் படிங்க: 20 ஆண்டுகளாக மண்டையில் சிக்கியிருந்த புல்லட் - மருத்துவர்கள் வியப்பு..
உள்நாட்டு தேவையை நிறைவேற்றுகிற அளவிற்கு அமெரிக்க நர்சிங் கல்லூரிகளில் இருந்து போதிய மாணவிகள் பட்டம் பெறுவதில்லை என்றும் கூறப்படுகிறது. நர்சிங் உட்பட சில தொழில்முறை வேலைகளுக்காக நிரந்தரமாக அமெரிக்கா செல்லும் மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 140,000 கிரீன் கார்டுகளை யு.எஸ் பொதுவாக வழங்குகிறது.
பெரும்பாலானவை ஏற்கனவே அமெரிக்காவில் தற்காலிக விசாவில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படுகின்றன, இருப்பினும் சில வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு கிரின் கார்டுகள் எண்ணிக்கை 2,80,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.