Home /News /international /

ஒமைக்ரான் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா மாத்திரைக்கு அங்கீகாரம்

ஒமைக்ரான் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா மாத்திரைக்கு அங்கீகாரம்

கொரோனா மாத்திரைக்கு அங்கீகாரம்

கொரோனா மாத்திரைக்கு அங்கீகாரம்

கொரோனா தொற்று பாதிப்பை குறைக்கும் பைசர் நிறுவனத்தின் மாத்திரைக்கு அமெரிக்க சுகாதார துறை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

    அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து இயங்கும் பைசர் நிறுவனம் கொரோனா வைரசுக்காக, பாக்ஸ்லோவிட் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது.கொரோனா அறிகுறிகள் தென்பட்ட மூன்று நாட்களில் இந்த மாத்திரை வழங்கப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விகிதம் 89 சதவீதம் குறையும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது மரபணு மாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் அமெரிக்காவில் வேகமாக பரவி வருவதால், பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது.

    இந்தநிலையில் பைசர் நிறுவனத்தின் கொரோனா மாத்திரைக பயன்பாட்டிற்கு அமெரிக்கா நேற்று அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. முதல்கட்டமாக 1 கோடி கொரோனா மாத்திரை வாங்க ஆர்டர் கொடுத்துள்ள அமெரிக்கா அரசு, பொதுமக்கள் இந்த மாத்திரையை வீட்டில் வைத்து பயன்படுத்தி கொள்ளவும் அனுமதி வழங்கி இருக்கிறது.

    பாக்ஸ்லோவிட் மாத்திரையை எடுத்துக் கொண்டால் ஒமைக்ரான் உள்ளிட்ட மோசமான அனைத்து வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த மாத்திரையை 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வபவர்களின் எடை குறைந்தது 40 கிலோ இருக்க வேண்டும்.

    Also Read : ஒமைக்ரான் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்? பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை

    இதனிடையே அமெரிக்காவில் செவ்வாயன்று ஒரே நாளில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 798 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 2 ஆயிரத்து 78 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதேபோல் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4-வது பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Omicron

    அடுத்த செய்தி