முகப்பு /செய்தி /உலகம் / பரபரப்பான சூழலில் அமெரிக்க ஆளுநர் தைவான் பயணம்.. கடுப்பில் சீனா..!

பரபரப்பான சூழலில் அமெரிக்க ஆளுநர் தைவான் பயணம்.. கடுப்பில் சீனா..!

தைவான் சென்ற அமெரிக்க ஆளுநர்

தைவான் சென்ற அமெரிக்க ஆளுநர்

US vs China : பொருளாதார வளர்ச்சி என்ற நோக்கில் நான் தைவானிற்கு பயணமாக வந்துள்ளேன் என அமெரிக்காவின் இந்தியானா ஆளுநர் எரிக் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • intern, IndiaTaipei cityTaipei city

தைவான் விவகாரத்தில் சீனாவை மீண்டும் சீண்டும் விதமாக அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தைச் சேர்ந்த ஆளுநர் தைவானுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி பயணத்தால் சீனா கோபத்தில் உள்ள நிலையில் அமெரிக்க ஆளுநரின் பயணம் இந்த மோதலில் அடுத்தக் கட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது. தைவான் தன்னை சுதந்திர தனி நாடாக கூறி வரும் நிலையில், சீனா தைவானை தனது நாட்டின் அங்கம் என திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் தைவான் நாட்டின் ஜனநாயக தன்னாட்சி அதிகாரத்திற்கு ஆதரவு நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சீனா, தைவான் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிடுவது, தீயுடன் விளையாடுவதற்கு சமம் என எச்சரித்துள்ளது. நான்சி பெலோசியின் தைவான் பயணத்தைத் தொடர்ந்து அதற்கு பதிலடி தரும் விதமாகவே தைவானை சூழ்ந்து மாபெரும் போர் ஒத்திகையை சீனா தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில் அமெரிக்காவின் இந்தியானா மாகண ஆளுநர் எரிக் ஹோல்கோம்ப் தைவான் சென்றுள்ளார். இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவராவார். அங்கு தைவான் அதிபர் ட்சாய் இங் வென்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தைவான் பயணம் குறித்து எரிக் தனது ட்விட்டர் பதிவில்  , "பொருளாதார வளர்ச்சி என்ற நோக்கில் நான் தைவானிற்கு பயணமாக வந்துள்ளேன். இந்தியானாவின் 10க்கும் மேற்பட்ட வணிகங்கள் தைவான் நாட்டை சார்ந்துள்ளது. எனவே, தைவானுக்கு வருகை தரும் முதல் ஆளுநர் என்பது பெருமையாக உள்ளது" என்றுள்ளார்.

இதையும் படிங்க: ரஷ்ய அதிபர் புதினின் வலது கரம்.. அலெக்சான்டர் துகினின் மகள் மர்ம மரணம்

top videos

    ஆளுநர் எரிக்கின் இந்த பயணத்தை சீனா கடுமையாக கண்டித்துள்ளது. தைவானை பகடைக்காயாக கொண்டு அமெரிக்க அரசியல்வாதிகள் இவ்வாறு தொடர் பயணத்தை மேற்கொண்டு வருவது பிரச்னையை மேலும் தீவிரமாக்கும் செயலாகும். இதற்கு உரிய பதிலை சீனா தரும் என்றுள்ளது.

    First published:

    Tags: Taiwan, USA, USA vs CHINA