ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது...!

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது...!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

US Shutdown | கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின் 4-வது முறையாகவும், அதிபர் டிரம்ப் பதவி ஏற்று 2-வது முறையாக நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மெக்சிகோ எல்லையை ஒட்டி சுவர் எழுப்ப 40 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு செனட் சபை ஒப்புதல் அளிக்காத நிலையில், நிதி செலவின மசோதாவும் நிறைவேற்றப்படாததால் அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது.

அமெரிக்கா - மெக்சிகோ இடையே பாதுகாப்பு காரணத்திற்காக அதிபர் ட்ரம்ப் நீண்ட எல்லைச் சுவற்றை கட்டி வருகிறார். இதற்கான 40 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு பிரதிநிதிகள் சபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் அதிகம் உள்ள செனட் சபையில், இந்த பட்ஜெட் நிறைவேறவில்லை. இது தொடர்பாக அதிபரின் முடிவுக்கு எதிர்ப்பு காரணமாக ஜனநாயகக் கட்சியினர் பட்ஜெட் மீது ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும், செலவின பட்ஜெட்டும் நிறைவேற்றப்படவில்லை.

இதனால், நேற்று நள்ளிரவு முதல் அந்நாட்டு அரசு முடங்கியது. நிர்வாக முடக்கம் காரணமாக 8 லட்சம் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் பணிக்கு வந்தாலும் ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நிர்வாக முடக்கம் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது தெரியவில்லை. அமெரிக்க அரசின் நிர்வாக முடக்கம் நீண்ட காலம் நீடிக்காது என நம்பிக்கை இருப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின் 4-வது முறையாகவும், அதிபர் டிரம்ப் பதவி ஏற்று 2-வது முறையாக நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இரு சபைகளும் மீண்டும் கூட உள்ளது. அப்போது நிர்வாக முடக்கத்தை சரி செய்வது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also See..

Published by:Sankar
First published:

Tags: Donald Trump, USA