ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்க அரசுத் துறைகள் தொடர்ந்து 22-வது நாளாக முடக்கம்!

அமெரிக்க அரசுத் துறைகள் தொடர்ந்து 22-வது நாளாக முடக்கம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

முன்னதாக பில் கிளிண்டன் ஆட்சியில் 1995-1996 காலகட்டத்தில் 21 நாட்களுக்கு அரசுத் துறைகள் முடங்கியிருந்தன.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  அமெரிக்க அரசுத் துறைகளின் முடக்கம், அந்நாட்டின் வரலாற்றிலேயே நீண்ட நாட்கள் நீடிக்கும் முடக்கம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

  மெக்சிகோ எல்லையில் பாதுகாப்புச் சுவர் எழுப்ப நிதி ஒதுக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தலுக்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், அமெரிக்க அரசுத் துறைகளின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கும் மசோதாவும் நிறைவேறவில்லை.

  இதனால் அதிபர் ட்ரம்பின் உத்தரவை அடுத்து பல்வேறு அரசுத் துறைகள் முடங்கி 8 லட்சம் ஊழியர்கள் ஊதியமின்றி பணியாற்றும் நிலைக்கும், கட்டாய விடுப்பில் செல்லும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். நள்ளிரவுடன் இந்த முடக்கம் 22-வது நாளை எட்டியது. முன்னதாக பில் கிளிண்டன் ஆட்சியில் 1995-1996 காலகட்டத்தில் 21 நாட்களுக்கு அரசுத் துறைகள் முடங்கியிருந்தன.

  Also watch

  Published by:DS Gopinath
  First published:

  Tags: President Donald Trump, USA