ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்காவையும் அச்சுறுத்தம் கொரோனா வைரஸ்! சீனாவில் 9 பேர் பலி

அமெரிக்காவையும் அச்சுறுத்தம் கொரோனா வைரஸ்! சீனாவில் 9 பேர் பலி

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் ஒருவரைத் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

  சீனாவின் வுஹான், பீஜிங் நகரங்களில் பரவி வரும் இந்த வைரஸால் 440-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என கண்டறியப்படவில்லை. விலங்குகளிலிருந்து மனிதருக்கு வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த வைரஸ் குறித்து ஆராய்ந்து வரும் சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரையில் சீனாவில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், அமெரிக்காவில் கொரோனா தாக்குதலில் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 30 வயதைக் கடந்த அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர், தற்போது மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also see:

  Published by:Karthick S
  First published: