காதலியை பிணையில் எடுக்க திருடிய போது இருவரை கொலை செய்த வழக்கில் அமெரிக்கர் ஒருவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2022ம் ஆண்டில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முதல் நபரான அவர் செய்த குற்றச்செயல், அதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.
மரண தண்டனைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு நாடுகள் குரல் எழுப்பி வருகின்றன. குற்றச் செயல்களை குறைக்க மரண தண்டனை அவசியம் என்பது ஒரு தரப்பினரின் வாதம், மனிதநேயமற்ற செயல்களில் நாகரீக மனித சமூகம் ஈடுபடுவது அபத்தம் என்பது மற்றொரு தரப்பின் வாதம். நிலைமை இப்படியிருக்க அமெரிக்க நாட்டிலும், மரண தண்டனை தொடர்பாக இருவேறு நிலைப்பாடுகள் இருந்து வருகின்றன.
அமெரிக்காவின் 23 மாகாணங்களில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. கலிபோர்னியா, ஓரேகான், பென்சில்வேனியா என 3 மாகாணங்கள் அந்த தண்டனையை ஒழிக்கும் தருவாயில் இருக்கின்றன. இருப்பினும் எஞ்சிய மாகாணங்களில் அதிகபட்ச தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்ந்து வருகிறது. அதன்படி, ஓக்லஹோமா மாகாணத்தில் இந்த ஆண்டில் முதல் முறையாக ஒரு நபருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
Also read: நீட் தேர்வில் வெற்றி பெற்ற தருமபுரி முதியவரின் மருத்துவ கனவு நிஜமாகுமா?
46 வயதாகும் டொனால்ட் கிராண்ட்-க்கு விஷ ஊசி செலுத்தி இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2005ம் ஆண்டுக்கு இவருக்கு மரண தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டது. பல்வேறு முறை தண்டனையில் இருந்து தப்ப மறுசீராய்வு மனு செய்திருந்த நிலையில் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. கடைசியாக துப்பாக்கியால் சுட்டு தனக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கையை அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த புதனன்று நிராகரித்தது.
Also read: 'கடவுள் என் பிரா சைசை அளவிடுகிறார்' - மீடியா முன் 'பிக் பாஸ்' நடிகை ஆபாச பேச்சு!!
2001ம் ஆண்டு டொனால்ட் கிராண்ட் (அப்போது 25 வயது) சிறையில் இருக்கும் தனது காதலிக்கு பெயில் வாங்குவதற்காக ஓட்டல் ஒன்றில் புகுந்து திருடியுள்ளார். அப்போது அவரை எதிர்த்த ஓட்டல் ஊழியர்களில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டும், மற்றொருவரை கத்தியால் குத்தியும் அவர் படுகொலை செய்தார். இந்த குற்றத்திற்காக விஷ ஊசி செலுத்தப்பட்டு டொனால்ட் கிராண்ட்க்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் போது, பாதிக்கப்பட்டவர்கள், செய்தியாளர்கள், டொனால்ட் கிராண்ட் உறவினர்கள் போன்றோர் அங்கு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.