68 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் பெண் கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: கொலை செய்து பெண்ணின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்த பயங்கரக் குற்றவாளி
மாண்ட்கோமெரி தன் பால்யப் பருவத்தில் தன் வளர்ப்புத் தந்தையாலும் அவரது நண்பர்களாலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டார். இதனால் மரண தண்டனை விதிக்கக் கூடாது, ஆயுள் சிறை விதிக்கப்படவேண்டும் என்று வாதிட்டனர், ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை.

லிசா மாண்ட்கோமெரி.
- News18 Tamil
- Last Updated: January 13, 2021, 3:23 PM IST
அமெரிக்காவில் 68 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பாபி ஜோ ஜின்னெட் என்பவரின் உறவினர்கள் இந்த மரண தண்டனையை நேரில் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
அமெரிக்காவின் மிசவ்ரி மாகாணத்தைச் சேர்ந்த மாண்ட்கோமெரி (52), என்ற இந்தப் பெண் மீது 2007-ல் கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது, இவர் 2004ம் ஆண்டு பாபி ஜோ ஜின்னெட் என்ற 23 வயது கர்ப்பிணிப் பெண்ணைக் கடத்திச் சென்று அந்தப் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, அந்தப் பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து குழந்தையை வெளியே எடுத்தார். இந்த கொடூரமான கொலைக் குற்றம் அமெரிக்காவையே உலுக்கியது. இதை தன் குழந்தை என்று அவர் கூறிக் கொண்டார்.
பிறகு போலீசாரின் கிடுக்கிப் பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது, இவர் டிரம்ப்பிடம் கருணை மனு தாக்கல் செய்தார். ஆனால் பயனில்லை. இவருக்கு பெர்னோபார்பிட்டால் என்ற விஷ ஊசி செலுத்தப்பட்டு இண்டியானா சிறையில் மரண தண்டனை செவ்வாயன்று நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று மாண்ட்கோமெரியின் வழக்கறிஞர் வாதிட்டார்.
மாண்ட்கோமெரி தன் பால்யப் பருவத்தில் தன் வளர்ப்புத் தந்தையாலும் அவரது நண்பர்களாலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டார். இதனால் மரண தண்டனை விதிக்கக் கூடாது, ஆயுள் சிறை விதிக்கப்படவேண்டும் என்று வாதிட்டனர், ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை.அமெரிக்க தண்டனை வரலாற்றில் இதற்கு முன்னர் 6 வயது சிறுவனைக் கடத்திக் கொலை செய்ததற்காக 1953-ல் போனி பிரவுன் ஹெடி என்ற பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு இத்தனை ஆண்டுகள் கழித்து மாண்ட்கோமெரி என்ற பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிசவ்ரி மாகாணத்தைச் சேர்ந்த மாண்ட்கோமெரி (52), என்ற இந்தப் பெண் மீது 2007-ல் கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது, இவர் 2004ம் ஆண்டு பாபி ஜோ ஜின்னெட் என்ற 23 வயது கர்ப்பிணிப் பெண்ணைக் கடத்திச் சென்று அந்தப் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, அந்தப் பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து குழந்தையை வெளியே எடுத்தார். இந்த கொடூரமான கொலைக் குற்றம் அமெரிக்காவையே உலுக்கியது. இதை தன் குழந்தை என்று அவர் கூறிக் கொண்டார்.
பிறகு போலீசாரின் கிடுக்கிப் பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டார்.