Home /News /international /

6 மாதத்தில் 40 கிலோ எடை குறைத்த அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர்

6 மாதத்தில் 40 கிலோ எடை குறைத்த அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர்

எடை குறைப்பில் ஈடுபட ஆர்வம் உடையவர்கள், சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். அதை தவிர்த்து விட்டு மற்ற எந்த வழிகளை பின்பற்றினாலும் உரிய பலன் கிடைக்காது. - மைக் பாம்பியோ

எடை குறைப்பில் ஈடுபட ஆர்வம் உடையவர்கள், சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். அதை தவிர்த்து விட்டு மற்ற எந்த வழிகளை பின்பற்றினாலும் உரிய பலன் கிடைக்காது. - மைக் பாம்பியோ

எடை குறைப்பில் ஈடுபட ஆர்வம் உடையவர்கள், சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். அதை தவிர்த்து விட்டு மற்ற எந்த வழிகளை பின்பற்றினாலும் உரிய பலன் கிடைக்காது. - மைக் பாம்பியோ

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு வலதுகரமாக விளங்கியவருமான மைக் பாம்பியோ, 6 மாதத்தில் 40 கிலோ எடை வரை குறைத்துள்ளார். அவரது இந்த சாதனையை அமெரிக்க ஊடகங்கள் பாராட்டி வருகின்றனர். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்போர், பாம்பியோவிடம் டிப்ஸ் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ட்ரம்பின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக பொறுப்பில் இருந்த மைக் பாம்பியோ, தற்போது ஃபாக்ஸ் நியூஸ் சேனலின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். நீண்ட நாட்களுக்கு பின்னர் அவரை தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் அசந்து போனார்கள். எப்போதும் கொழுகொழுவென காட்சியளிக்கும் பாம்பியோ, எடை குறைந்து ஸ்லிம்மான தோற்றத்தில் டிவியில் தோன்றினார். அவரைப் பார்த்தவர்களில் சிலர் இவர் பாம்பியோ தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

இதையும் படிங்க : மணிதர்களுக்கு அதிகம் தென்படாத அரிய வகை சிறுத்தை நாகாலந்தில் கண்டுபிடிப்பு!

பாம்பியோவின் இந்த அதிரடி உடல் எடைக் குறைப்பு அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பாம்பியோ அளித்த பதிலில் கூறியிருப்பதாவது-

6 மாதத்திற்கு முன்பு எதேச்சையாக எனது உடல் எடையை அளவிட்டுப் பார்த்தேன். மெஷினில் 136 கிலோ என வந்ததும், எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதை எப்படியும் குறைத்து கட்டுக் கோப்பாக மாற வேண்டும் என்று அன்றைக்கே முடிவெடுத்தேன். இதுபற்றி என் மனைவி சுசனிடமும் தெரிவித்து, உடல் எடைக் குறைப்பில் உறுதியாக இருந்தேன்.

இதையும் படிங்க : பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு வீடியோ: ஜிந்தாபாத் கோஷங்களுடன் பிரதமரை நெருங்கி நிற்கும் பாஜகவினர்!

வீட்டிலேயே ஜிம் அமைக்க முடிவெடுத்து, எலிப்டிகல் மெஷின் ஒன்றையும், சில டம்பல்ஸ்களையும் வாங்கி, தினமும் பயிற்சி எடுத்தேன். நானே உணவுக் கட்டுப்பாடு திட்டத்தை உருவாக்கி, அதை மிகுந்த ஒழுக்கத்துடன் கடைபிடித்தேன். வாரம் தோறும் எடை குறையக் குறைய எனக்கு உற்சாகம் ஏற்பட்டது.

ஒரு நாளைக்கு குறைந்த 30 நிமிடத்திற்கும் மேலாக உடற்பயிற்சி மேற்கொள்வேன். இதற்காக நான் எந்த பயிற்சியாளரையும் உதவிக்கு வைத்துக் கொள்ளவில்லை. கடைசியாக கடந்த 6 மாதத்தில் 40 கிலோ குறைந்து தற்போது 96 கிலோவாக உள்ளேன். எடை குறைப்பில் ஈடுபட ஆர்வம் உடையவர்கள், சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். அதை தவிர்த்து விட்டு மற்ற எந்த வழிகளை பின்பற்றினாலும் உரிய பலன் கிடைக்காது.

இதையும் படிங்க : மகாராஷ்டிராவில் 4 நாட்களில் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கொரோனா..

இவ்வாறு அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் வெளியுறவு புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ.வின் தலைவராகவும் பாம்பியோ இருந்துள்ளார். அவர் 2024-ல் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: United States of America

அடுத்த செய்தி