ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு: தீர்ப்பு என்ன தெரியுமா?

டெரிக் சாவின்

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லபட்ட வழக்கில் முன்னாள் காவலர் டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தை சேர்ந்தவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அப்போது டெரிக் சாவின் என்ற காவலர் பிளாய்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து அழுத்தினார். இதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இதையடுத்து, ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் உட்பட பல மாகாணங்களில் போராட்டம் வெடித்தது. இதனிடையே, ஜார்ஜ் பிளாய்டு குடும்பத்தினர் தரப்பில் மினசோட்டா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் படிக்க...10 மாதங்களில் 43 முறை பாசிட்டிவ்; கொரோனா வைரஸுடன் சாதனை படைத்த முதியவர் - வியக்கும் மருத்துவ உலகம்!

  விசாரணையின் முடிவில் டெரிக் சாவின் குற்றவாளி என்று நிரூபணமானது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது மற்றும் ஜார்ஜ் பிளாய்டுக்கு எதிராக அரங்கேற்றிய கொடூரத்தை கருதி இந்த தண்டனை அளிக்கப்படுவதாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

   
  Published by:Vaijayanthi S
  First published: