• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இலங்கையில் சூஃபி இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை!

இலங்கையில் சூஃபி இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கை!

பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையினர்

பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையினர்

தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள ஸ்லீப்பர் செல்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இலங்கையில் வார இறுதியில் மீண்டும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 253 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினமான, கடந்த ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் பலர் உயிரிழந்த நிலையில், 500-க்கும் மேற்பட்டோர் கொழும்பில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்தத் தாக்குதலில் 359 பேர் உயிரிழந்ததாக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 253 தான் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.

குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் உடல்கள் சிதறிவிட்டதால், கை, கால் மற்றும் உடல்களை வைத்து கணக்கிட்டதால் ஏற்பட்ட தவறு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த 11 பேரும், இங்கிலாந்தை சேர்ந்த 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

டென்மார்க் நாட்டினர் மூவரும், சீனா, சவுதி அரேபியா, துருக்கி நாடுகளை சேர்ந்த தலா இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 76 பேரை கைது செய்து இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டுவெடிப்பு நடந்த தேவாலயம்


இதனிடையே, தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடைய 3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை இலங்கை அரசு வெளியிட்டது.

அவர்கள் தேடப்படும் நபர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்துல் காதர் ஃபாத்திமா காதியா என்பவரின் புகைப்படத்திற்கு பதிலாக, அமெரிக்க எழுத்தாளர் அமாரா மஜீத் என்பவரின் புகைப்படத்தை தவறுதலாக வெளியிட்டு விட்டதாக இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொழும்பு மட்டக்குழிய பகுதியில் 21 கையெறிக் குண்டுகளை கண்டெடுத்த சிறப்பு படை, முகத்துவாரம் பகுதியில் கையெறி குண்டு மற்றும் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3பேர் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று மாலை மட்டும் 16 பேரை கைது செய்தனர்.

மறு உத்தரவு வரும்வரை இலங்கை வான் எல்லைக்குள் ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க அந்நாட்டு விமானப் போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது. இதனிடையே, அதிபர் சிறீசேனாவின் அறிவுறுத்தலை ஏற்று, பாதுகாப்புத்துறை செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் வார இறுதி நாட்களில் மீண்டும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரணில் விக்கரமசிங்கே | Ranil Wickramasinghe
ரணில் விக்கரமசிங்கே


கிறிஸ்தவர்களைத் தொடர்ந்து சூபி இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக கிடைத்துள்ள தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இன்றைய வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டுமென இஸ்லாமிய மத விவகாரங்களுக்கான அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பதற்றம் தணியும் வரை தேவாலயங்களில் எந்த பிரார்த்தனை வழிபாடுகளும் மேற்கொள்ளக் கூடாது என தலைமை பேராயர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ள இலங்கை அரசு, இஸ்லாமியர்கள் அவரவர் வீடுகளுக்குள்ளேயே தொழுகையை மேற்கொள்ளவும் கூறியுள்ளது.

Mythri bala sirisena | இலங்கை அதிபர் சிறிசேனா
இலங்கை அதிபர் சிறிசேனா


இந்நிலையில், பிரிட்டன் நாட்டவர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை கைவிடுமாறு அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் தொடர்புடையவர்களை போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் சுற்றிவளைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளனர்.

அதேபோல, தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள ஸ்லீப்பர் செல்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தாக்குதல் அபாயம் சற்று குறைந்திருந்தாலும், மேலும் சில ஸ்லீப்பர் செல்களை பிடிக்க வேண்டியிருப்பதாகவும் அவர்களை அடுத்த சில நாட்களில் பாதுகாப்புப் படையினர் கைது செய்வார்கள் என்று ரணில் விக்ரமசிங்கே உறுதியளித்தார்.

Also see... EXCLUSIVE | இலங்கை தாக்குதல் தொடர்பான விசாரணையில்


Als3
Also see...

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: