• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • உடனே வெளியேறுங்கள்.. பாதுகாப்பு இல்லை - எச்சரிக்கை விடும் அமெரிக்க தூதரகம்

உடனே வெளியேறுங்கள்.. பாதுகாப்பு இல்லை - எச்சரிக்கை விடும் அமெரிக்க தூதரகம்

காபூல் விமானநிலையம்

காபூல் விமானநிலையம்

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக காபூல் விமான நிலையத்திற்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது

  • Share this:
    காபூல் விமானநிலையத்தை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஆப்கானிஸ்தானை 20 வருடங்களுக்கு பிறகு தாலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டினரும் உள்நாட்டு மக்களும் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். காபூல் விமான நிலையம் தற்போது வெளிநாட்டு ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஏராளமானோர் அங்கு தஞ்சமடைந்துள்ளன. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் காபூல் விமானநிலையத்தில்  உள்ள தங்கள் நாட்டினரை மீட்டு வருகின்றனர்.  காபூல் விமான நிலையத்துக்கு வெளியில் உள்ள பகுதிகள் முழுவதும் தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ளதால், விமான நிலையங்களுக்குள் பொதுமக்கள் நுழையாதபடி தாலிபான்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Also Read: கொழுந்தனார் கேட்ட கேள்வியால் கொதித்த அண்ணி.. மகனுடன் சேர்ந்து கொலை செய்த பயங்கரம்

    இந்நிலையில்தான் காபூல் விமான நிலையத்தின் வெளியில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதனைத்தொடர்ந்து பேரோன் ஹோட்டல் அருகிலும் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக காபூல் விமான நிலையத்திற்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

    Also Read:  மதுரையில் தண்ணீர் தந்த அதிசய மரம் – மாநகராட்சி கொடுத்த விளக்கம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் தனது இணையத்தில், “ காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால் அமெரிக்க குடிமக்கள் விமான நிலையம் செல்வதை தவிருங்கள். விமான நிலைய வாயில்களையும் தவிருங்கள். அப்பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக வெளியேறுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: