அமெரிக்காவில் வரும் நவம்பா் 3-ஆம் தேதி அதிபா் தோ்தல் - 6 பிரச்சாரத் திட்டங்களை முன்னிறுத்தி ட்ரம்ப் வியூகம்..

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பா் 3ம் தேதி அதிபா் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் 6 பிரச்சார திட்டங்களைக் கையாளவுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பா் 3-ஆம் தேதி அதிபா் தோ்தல் - 6 பிரச்சாரத் திட்டங்களை முன்னிறுத்தி ட்ரம்ப் வியூகம்..
ட்ரம்ப்
  • Share this:
அமெரிக்காவில் அடுத்த அதிபா் தோ்தல் வரும் நவம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலில், முக்கிய கட்சிகளான ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபா் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் வேட்பாளராக தன்னை அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு ட்ரம்ப் உரையாற்றினார். அப்போது இதுவரை நடந்த தேர்தல்களிலேயே இந்த தேர்தல்தான் முக்கியத் தேர்தலாக இருக்கப் போவதாக கூறினார். தனக்கு எதிராக போட்டியிடும் ஜோ பைடனை கடுமையாக தாக்கிய ட்ரம்ப், அனைத்து பிரச்னைகளிலும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டையே ஜோ பைடன் எடுத்ததாக குற்றம்சாட்டினார்

கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்காவில் உயிரிழப்பு சதவிகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக ட்ரம்ப் கூறினார். அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாலேயே பாதிப்பு அதிகமாக காணப்படுவதாகவும் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இந்தியா தான் மிக அதிக சோதனைகளைச் செய்வதாகவும் கூறினார்.


அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், 6 முக்கிய காரணிகளை முன்னிறுத்தி தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்த ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி தீவிர நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதாக பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக ட்ரம்பின் குழுவினர் அறிவித்துள்ளனர். அமெரிக்காவை மீண்டும் வலிமையான பொருளாதார சக்தியாக மாற்றுவது, ட்ரம்ப் கறுப்பினத்தவருக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை உடைப்பது, சட்டம் ஒழுங்கை கட்டிக் காத்தது என்ற பிரச்சாரங்களை முன்னெடுக்க குடியரசுக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனை கடுமையாக தாக்குவது, யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்யாமல் இருப்பவர்களின் வாக்குகளை கவருவது என வியூகம் வகுத்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது என ட்ரம்ப் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
First published: August 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading