ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்க அதிபர் தேர்தல்: 2-வது முறை போட்டியிட்டு தோல்வியடைந்த அதிபர்கள் யார் யார்?

அமெரிக்க அதிபர் தேர்தல்: 2-வது முறை போட்டியிட்டு தோல்வியடைந்த அதிபர்கள் யார் யார்?

டிரம்ப்  (Reuters)

டிரம்ப் (Reuters)

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், டிரம்பை போல இரண்டாவது முறை போட்டியிட்டு வெற்றியை நழுவவிட்ட அதிபர்கள் யார்?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அமெரிக்காவில் அதிபரின் அலுவலகம் 1789-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. அந்நாட்டின் 231 ஆண்டு கால வரலாறு, இதுவரை 45 அதிபர்களை கண்டுள்ளது. இதில் 10 அதிபர்கள் மட்டுமே இரண்டாவது முறை போட்டியிட்டு தோல்வியை கண்டுள்ளனர்.

1797 முதல் 1801 வரை அதிபராக இருந்த ஜான் ஆடம்ஸ்தான் இரண்டாவது முறையாக போட்டியிட்டு தோல்வி கண்ட முதல் அதிபர். அமெரிக்காவின் முதல் துணை அதிபர் என்ற பெருமையை பெற்ற ஜான் ஆடம்ஸ். இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது மூன்றாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது.

இதே போன்று 1825-ஆம் ஆண்டு முதல் 1829 ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்த ஜான் குயின்சி ஆடம்ஸ், இரண்டாவது முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டார். 1837 முதல் 1841 வரை பதவியில் இருந்த மார்ட்டின் வான் புரன் இரண்டாவது தேர்தலில் தோல்வி கண்ட மூன்றாவது அதிபர் ஆவார்.

US election Results 2020 | அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை..

ஆனால் ஆச்சரியமாக குரோவர் கிளீவ்லேண்ட், அமெரிக்காவின் 22 மற்றும் 24-வது அதிபராக பதவி வகித்தார். 1885 முதல் 1889 வரை அதிபராக இருந்த அவர், மக்களின் வாக்குகளை அதிகம் பெற்ற போதிலும் தேர்தல் குழுவினரின் போதுமான ஆதரவு கிடைக்காததால், 1888 தேர்தலில் தோல்வியடைந்தார். ஆனால் 1893 தேர்தலில் கிளீவ்லேண்ட் வெற்றி பெற்றதால், பெஞ்சமின் ஹரிசன் இரண்டாவது முறை தேர்வு செய்யப்படவில்லை.

குடியரசுக் கட்சியின் சார்பில் 1909-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட்-க்கு இரண்டாவது முறை அதிபராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அமெரிக்காவில் அதிபர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்ற இரு பொறுப்புகளை வகித்தவர் டாஃப்ட் மட்டுமே.

மேலும் படிக்க... உச்சகட்ட பரபரப்பில் அமெரிக்க தேர்தல் களம்.. அடுத்தடுத்து என்ன நிகழக்கூடும்?

1929 தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான ஹெர்பர்ட் ஹூவருக்கும் இரண்டாவது முறை அதிபராகும் அதிஷ்டம் கிடைக்கவில்லை. அவரின் ஆட்சியின் போது பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி கண்டு, பொருளாதார சரிவு ஏற்பட்டதால், அடுத்த தேர்தலில் ஹெர்பர்ட் ஹூவர் பெரும் தோல்வி கண்டார். வாட்டர் கேட் ஊழல் புகாரில் ரிச்சர்டு நிக்சன் பதவி விலகிய போது, ஜெரால்டூ ஃபோர்ட் அதிபரானார். 1974 முதல் 3 ஆண்டுகள் பதவியிலிருந்த ஃபோர்ட், 1976 தேர்தலில் ஜிம்மி கார்டரிடம் தோல்வி அடைந்தார்.

அமெரிக்க தேர்தல்: வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி ட்ரம்ப் தரப்பு வழக்கு

1981- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜிம்மி கார்டர் தோல்வியுற்றார். இதன் காரணமாக அடுத்தடுத்த இரண்டு அதிபர்கள் இரண்டாவது முறை அதிபராகும் வாய்ப்புகளை இழந்தனர். இதன் பிறகு 1993 - ஆம் ஆண்டு தேர்தலில் ஜார்ஜ் புஷ் சீனியர் மீண்டும் தேர்வாகவில்லை. அவர் பில் கிளிண்டனிடம் தோல்வியடைந்தார்.

First published:

Tags: America, Donald Trump, Joe biden, US Election 2020