Home /News /international /

அமெரிக்க தேர்தல்: வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி ட்ரம்ப் தரப்பு வழக்கு

அமெரிக்க தேர்தல்: வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி ட்ரம்ப் தரப்பு வழக்கு

ஜோ பைடன் | டொனால்ட் ட்ரம்ப்

ஜோ பைடன் | டொனால்ட் ட்ரம்ப்

ஜார்ஜியாவில் வாக்குப்பதிவுக்கான நேரம் முடிந்த பிறகும், வாக்குப் பதிவு நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகிக்கும் நிலையில், பென்சில்வேனியா, மிச்சிகன், ஜார்ஜியா மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி ட்ரம்ப் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

    கடந்த செவ்வாயன்று நடைபெற்ற அமெரிக்க தேர்தலில், தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பை விட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கூடுதல் இடங்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருந்து வருகிறார். அரிசோனா, ஜார்ஜியா, நிவாடா, பெனிசில்வேனியா, வடக்கு கரோலினா, அலாஸ்கா மற்றும் விஸ்கான்ஸின் மாகாணங்களில் கடும் இழுபறி நீடித்து வரும் நிலையில், மூன்று மாகாணங்களில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக ட்ரம்ப் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ட்ரம்ப் பிரச்சாரக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பென்சில்வேனியா, மிச்சிகனில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் குடியரசுக் கட்சியினரை அனுமதிக்க மறுப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிட அனுமதிக்கும்வரை ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என வழக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியாவில் வாக்குப்பதிவுக்கான நேரம் முடிந்த பிறகும், வாக்குப் பதிவு நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், விஸ்கான்ஸினில் மறுவாக்கு எண்ணிக்கை கோரவும் ட்ரம்ப் தரப்பு திட்டமிட்டுள்ளது.



    விஸ்கான்சினின் 10 வாக்குகள் மற்றும் மிச்சிகனின் 16 வாக்குகளைப் பெற்ற பைடன், மொத்தம் 264 வாக்குகளைப் பெற்று வெற்றியை நெருங்கியுள்ளார். மெய்ன் மாகாணத்தில் அம்மாகாண முறைப்படி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தேர்வுக்குழு வாக்குகள் பகிர்ந்தளிக்கப்படும் என்பதால் மொத்தமுள்ள 4 வாக்குகளில் ஏற்கனவே மூன்று பைடனுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், ட்ரம்ப் ஒரு வாக்கைப் பெற்றதால் அவரது எண்ணிக்கை 214-ஆக உயர்ந்தது.

    பைடனின் வெற்றிக்கு 6 வாக்குகளே தேவைப்படும் நிலையில், அவர் முன்னிலையில் உள்ள நெவாடாவில் வென்றால் 6 வாக்குகளைப் பெற்று பைடன் அதிபராகி விடுவார். ட்ரம்பின் வெற்றிக்கு 56 வாக்குகள் தேவைப்படும் நிலையில், அவர் முன்னிலையிலுள்ள பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா, அலாஸ்கா ஆகிய 4 மாகாணங்களில் வென்றாலும் 54 வாக்குகளே கிடைக்கும் என்பதால் ட்ரம்பின் வெற்றி கேள்விக்குறி ஆகியுள்ளது.
    Published by:Rizwan
    First published:

    Tags: Donald Trump, Joe biden, US Election 2020

    அடுத்த செய்தி