• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • நீண்ட இழுபறிக்குப் பின், ஆட்சி அதிகாரத்தை முறையாக ஜோ பைடனுக்கு மாற்றம் செய்வதாக டிரம்ப் அறிவிப்பு..

நீண்ட இழுபறிக்குப் பின், ஆட்சி அதிகாரத்தை முறையாக ஜோ பைடனுக்கு மாற்றம் செய்வதாக டிரம்ப் அறிவிப்பு..

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை முறையாக மாற்ற அதிபர் டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், நீண்ட இழுபறிக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தை பைடனுக்கு மாற்றம் செய்ய அதிபர் டிரம்ப் சம்மதம் தெரிவித்து அறிவித்துள்ளார். ஆட்சியை முறையாக ஒப்படைப்பது தொடர்பாக பொது சேவை நிர்வாகம் (general service administration) அமைப்புக்கு டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அதிகார மாற்றத்திற்கு அறிவுறுத்தியிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    இதனைதொடர்ந்து வெளியுறவுத் துறை உள்பட தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்களின் பெயர்ப்பட்டியலை ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதன்படி, ஆன்டனி பிளின்கென் வெளியுறவுத் துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இவர் இந்திய- அமெரிக்கா அணு ஒப்பந்தத்தின் போது முக்கிய பங்காற்றியவர். அதேபோல் முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஜான் கெர்ரியை, காலநிலை மாற்ற விவகாரங்களுக்கான சிறப்பு தூதராக, ஜோ பைடன் நியமித்துள்ளார்.

    அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில், முதன்முறையாக காலநிலை மாற்ற விவகாரங்களுக்கான சிறப்பு தூதர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு, தனது மூத்த ஆலோசகர்களில் ஒருவரான ஜேக் சல்லிவனை பைடன் நியமனம் செய்துள்ளார். அதேபோன்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சராக அலெஜான்ட்ரோ மயோர்காஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    முதல்முறையாக லத்தீன் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவரும், அங்கிருந்து அமெரிக்காவில் குடியேறியவருக்கும் இப்பதவி வழங்கப்பட்டுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    மேலும் படிக்க...சோமாலியாவை தாக்கிய 'கதி' புயல் ஏமனை தாக்கியது..



    முன்னாள் சிஐஏ துணை இயக்குநரான அவ்ரில் ஹைன்ஸ் தேசிய புலனாய்வு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய புலனாய்வு இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். அமைச்சரவை உறுப்பினர் அந்தஸ்துடன், லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதராக பணியாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: