நிர்வாக பணிகளை தொடங்கிய ஜோ பைடன்... முட்டுக்கட்டை போடும் டிரம்ப்
US Election 2020 | அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், வரும் ஜனவரி 20ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார். நிர்வாகப் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டார் பைடன்.

ஜோ பைடன் - ட்ரம்ப்
- News18 Tamil
- Last Updated: December 1, 2020, 5:56 AM IST
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், தனது நிர்வாகத்திற்கு முழுவதும் பெண்கள் அடங்கிய செய்தித் தொடர்பாளர் குழுவை அமைத்துள்ளார். இதனிடையே, தனது வீட்டில் நாயுடன் விளையாடியபோது பைடனின் கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், வரும் ஜனவரி 20ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார். நிர்வாகப் பணிகளை இப்போதே தொடங்கிவிட்ட பைடன், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 13 பேர் கொண்ட குழுவை அமைத்தார். இதில், ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட பெண் மருத்துவர் செலின் ராஜ் என்பவரும் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையின் செய்திப் பிரிவு தலைவராக, முன்னாள் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜென் சாகியை நியமித்துள்ளார். அத்துடன், தேர்தல் பிரசார பணிகளை கவனித்த கேட் பிடெங்ஃபீல்ட் என்பவரை வெள்ளை மாளிகை தகவல் துறை இயக்குநராகவும், தேர்தல் பிரசார மூத்த ஆலோசகர் சீமோன் சேண்டர்ஸையும், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசையும் தலைமைப் பேச்சாளர்களாக நியமித்துள்ளார். இதனிடையே, வீட்டில் கடந்த சனிக்கிழமை செல்ல நாயுடன் விளையாடியபோது, அவருக்கு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், நடக்க முடியாமல் அவதியடைந்த பைடனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பைடனுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பைடன் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், தேர்தல் வெற்றிக்காக தாம் தொடர்ந்து போராட இருப்பதாக தெரிவித்துள்ளார். 6 மாதத்திற்கு இந்த நிலையில் இருந்து, தன்னுடைய மனம் மாறாது என்றும் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், வரும் ஜனவரி 20ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார். நிர்வாகப் பணிகளை இப்போதே தொடங்கிவிட்ட பைடன், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 13 பேர் கொண்ட குழுவை அமைத்தார். இதில், ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட பெண் மருத்துவர் செலின் ராஜ் என்பவரும் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையின் செய்திப் பிரிவு தலைவராக, முன்னாள் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜென் சாகியை நியமித்துள்ளார். அத்துடன், தேர்தல் பிரசார பணிகளை கவனித்த கேட் பிடெங்ஃபீல்ட் என்பவரை வெள்ளை மாளிகை தகவல் துறை இயக்குநராகவும், தேர்தல் பிரசார மூத்த ஆலோசகர் சீமோன் சேண்டர்ஸையும், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசையும் தலைமைப் பேச்சாளர்களாக நியமித்துள்ளார்.