கொரோனா தொற்று பாதிப்பால் 8 லட்சம் உயிரிழப்புகள் என்ற சோகமான மைல்கல்லை அமெரிக்கா எட்டியுள்ளது. அங்கு அதிக அளவிலான சிறுவர்கள் தொற்றுக்கு ஆளாவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
2019- ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரத்தில் கண்டறியப்பட்டது கொரோனா தொற்று. தற்போது உலகமெங்கும் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ளது. கொரோனா தொற்று சீனாவில் முதலில் கண்டறியப்பட்டாலும், அதிகம் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நாடு அமெரிக்கா. அங்கு 5 கோடியே 11 லட்சத்து 36 ஆயிரத்து 442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்புகள் 8 லட்சத்தை கடந்துள்ளன. இதில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என கூறப்படுகிறது.
உலகின் மக்கள் தொகையில் அமெரிக்காவின் பங்கு 4 சதவிகிதம் மட்டுமே. ஆனால் கொரோனா உயிரிழப்புகளில் 15 சதவிகிதம் பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொற்றுக்கு பலியானவர்கள் ஒவ்வொருவரையும் தான் நினைவு கூர்வதாக தெரிவித்துள்ளார்.
Also read: சூரியனை தொட்ட முதல் விண்கலம் - 5 லட்சம் கிமீ வேகத்தில் படைக்கப்பட்ட சாதனை
அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும், அவர்கள் விட்டுச் சென்ற குடும்பத்தினரையும், என்றென்றும் நினைத்துப் பார்ப்பதாகவும் பைடன் கூறியுள்ளார். கேப்பிடால் ஹில்-லில் சபாநாயகர் நான்சி பெலோசி தலைமையில், ஒன்று கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
அமெரிக்காவில் தற்போது வரை 60 சதவிகிதம் மக்களுக்கு, இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே அதிகம் உயிரிழப்பதாக, அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது ஒமைக்ரான் திரிபு வேகமாக பரவி வருவதால், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வர வேண்டும் என, அதிபர் பைடன் வலியுறுத்தியுள்ளார். அங்கு அதிக அளவிலான சிறுவர்கள், தொற்றுக்கு ஆளாவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also read: கரப்பான் பூச்சி பீர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதை தான் இந்த ஊரில் பலர் விரும்பி குடிக்கிறார்கள்!
அமெரிக்காவைப் போலவே இங்கிலாந்திலும், கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. அங்கு ஒரே நாளில் 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இது கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கான பாதிப்பாகும். இதனை தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் "கோவிட் பாஸ்" பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பொது கூட்டம், இரவு விடுதி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நா டுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.