Home /News /international /

‘உனக்கு 17, எனக்கு 71’... 58 வயது வித்தியாசத்துடன் திருமணம் செய்து வாழும் அமெரிக்க ஜோடி

‘உனக்கு 17, எனக்கு 71’... 58 வயது வித்தியாசத்துடன் திருமணம் செய்து வாழும் அமெரிக்க ஜோடி

அமெரிக்க தம்பதி

அமெரிக்க தம்பதி

2015ம் ஆண்டு 53 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று, 7 ஆண்டுகளாக நீடித்து வரும் தங்களது திருமண வாழ்க்கை சிறப்பாகவும், நிலையாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளது

    2015ம் ஆண்டு 53 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று, 7 ஆண்டுகளாக நீடித்து வரும் தங்களது திருமண வாழ்க்கை சிறப்பாகவும், நிலையாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளது பாராட்டுக்களை குவித்து வருகிறது.

    காதலுக்கு வயது எப்போதும் ஒரு தடையாக இருந்தது கிடையாது. பருவ வயதை அடைந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்படி காதலிக்க உரிமை உள்ளதோ, அதே போல் திருமண வயதை எட்டிய ஆணோ, பெண்ணோ தங்களது மனம் ஒத்துப்போய் தன்னைவிட பல மடங்கு வயது வித்தியாசம் உள்ள ஆண் அல்லது பெண்ணை திருமணம் செய்து கொள்வதை கண்டிருப்போம். பெரும்பாலும் இத்தகைய திருமணங்கள் வெறும் இன கவர்ச்சி என்றும், நீண்ட நாட்கள் நீடிக்காது என்றும் விமர்சனங்கள் எழுவது உண்டு.

    ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஜோடி இந்த வீண் கூற்றுக்களை எல்லாம் அடித்து நொறுக்குவது போல் 58 வயது வித்தியாசத்துடன் திருமணம் செய்து “ஆஹா... ஓஹோ...” என ஊரே பொறாமைப்படும் அளவிற்கு வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கேரி மற்றும் 77 வயதான மூதாட்டி அல்மெடா இருவரும் 2015ம் ஆண்டு அதிகாரப்பூர்வ திருமணம் செய்து கொண்டனர். 2015ம் ஆண்டு அல்மெடாவின் மகன் இறுதிச்சடங்கில் பங்கேற்றதன் மூலமாக கேரிக்கும், அல்மெடாவிற்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இரண்டு வாரங்களிலேயே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இருவருக்கும் திருமணமாகும் போது அல்மெடாவிற்கு 71 வயது, அதை அப்படியே திருப்பி போட்டால் கேரிக்கு 17 வயது தான் ஆகியுள்ளது.

    இருவரும் திருமணம் செய்து கொண்ட போது, பலரும் அந்த உறவை கேவலமானதாகவும், தவறானதாகவும் அழைத்துள்ளனர். அதை எல்லாம் ஒருபோதும் இந்த தம்பதி தடுக்க முயற்சித்தது கிடையாது. தங்கள் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக இருப்பதை அவர்கள் முழுமனதோடு ஏற்றுக்கொண்டதால், இதுபோன்ற விமர்சனங்களை கண்டுகொள்வது கிடையாதாம்.

    காதலர் தினத்தை முன்னிட்டு உலகத்திலேயே சிறந்த மனைவி என அல்மெடாவை புகழ்ந்து கேரி போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. தனக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அற்புதமானது என்றும், இருவரும் ஒன்றாகச் செலவிடும் ஒவ்வொரு அவுன்ஸ் நேரத்தையும் ரசிப்பதாகவும் கேரி புகழ்ந்து தள்ளியுள்ளார். லாக்டவுன் நேரத்தில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுள்ளனர், அல்மெடாவிற்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மீண்டு வந்துள்ளார். இப்படியான மோசமான நிலைகளையும் இந்த தம்பதி கடந்து வந்துள்ளனர்.

    இந்த ஹோட்டலுக்கு சென்று 'நன்றி', 'ப்ளீஸ்' என்று சொன்னால் உங்களுக்கு சிறப்பு தள்ளுபடி நிச்சயம்

    43 வருடங்களுக்கு முன்பு அல்மெடாவிற்கு, முதல் கணவரான டொனால்டாவிற்கும் திருமணம் நடந்துள்ளது. 2013ம் ஆண்டு முதல் கணவர் உயிரிழந்த நிலையில், மூத்த மகனுடன் வசித்து வந்துள்ளார். அவரும் 2015ம் ஆண்டு வலிப்பு நோயால் இறந்துவிட அல்மெடா மனமுடைந்து போயுள்ளார். அந்த சமயத்தில் தனக்கு ஆறுதலாகவும், பலமாகவும் அமைந்த ஆத்ம துணை தான் கேரி என்றும், அவரை பார்த்ததுமே தனக்கு அது தெரிந்துவிட்டதாகவும் உணர்ச்சி பெருக்குடன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: America

    அடுத்த செய்தி