• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கொரோனாவிலிருந்து முழு விடுதலை பெற்று விட்டோம் என்று விரைவில் அறிவிப்போம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுதந்திர முழக்கம்

கொரோனாவிலிருந்து முழு விடுதலை பெற்று விட்டோம் என்று விரைவில் அறிவிப்போம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுதந்திர முழக்கம்

ஜோ பைடன்

ஜோ பைடன்

உலகம் முழுதிலும் குறிப்பாக அமெரிக்காவில் அதிக உயிர்பலிகளை வாங்கிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து விடுதலை பெற்று விட்டோம் என்று அறிவிக்கும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    அமெரிக்காவின் சுதந்திர தினம் ஜூலை 4ம் தேதி கொண்டாடப்படுகிறது, சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர் ஜோ பைடன் இதனை தெரிவித்துள்ளார்.

    வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் பேசுகையில், “உயிர்ப்பலிகள் வாங்கும் கொரோனா வைரஸிலிருந்து நாம் விடுதலை அடைந்து விட்டோம் என்று அறிவிக்கும் நாள் அருகில்தான் உள்ளது. இந்த வைரசுக்கு எதிராக நம் கை ஓங்கியுள்ளது.

    என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். கோவிட்-19 இன்னமும் முற்றிலும் ஒழியவில்லை. டெல்டா உருமாற்ற வைரஸ் போல் சக்தி வாய்ந்த உருமாறிகள் தோன்றியுள்ளன என்பதை அறிவோம்.

    245 ஆண்டுகளுக்கு முன்பாக (1776-ம் ஆண்டு) நாம் பிரிட்டீஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றோம். இன்று கொலைகார வைரஸிலிருந்து விடுதலை பெற்று விட்டோம் என்று அறிவிப்பதற்கு அருகில் இருக்கிறோம்.

    Also Read: கொரோனா வைரசுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

    கடந்த சில ஆண்டுகளாக நாம் இருண்ட காலங்களில் வாழ்ந்தோம். இப்போது நாம் நம் பிரகாசமான எதிர்காலத்தைப் பார்க்கப் போகிறோம். ” என்றார்.

    பைடன் நிர்வாகம் தடுப்பூசித் திட்டத்தை அதிவிரைவு கதியில் நடத்தி வருகிறது. ஞாயிறு நிலவரப்படி அமெரிக்காவின் 70% மக்களுக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் எகிறிய தினசரி பாதிப்புகள் இப்போது குறையத் தொடங்கியுள்ளன. ஆனாலும் தினமும் 200 பேராவது கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். 33 மில்லியன் கொரொனா தொற்றுக்களுடன் இதுவரை 6 லட்சத்து 5 ஆயிரம் பேர் அமெரிக்காவில் மரணமடைந்துள்ளனர்.

    கொரோனா வைரஸுக்கு எதிராக 2 டோஸ்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என்ற மைல்கல் அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது அமெரிக்கா, இப்போது கொரோனாவிலிருந்து முழு விடுதலை என்ற அறிவிப்புக்கு அருகில் உள்ளோம் என்று கூறியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: