உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக குழந்தைகளிடம் பரவும் மர்ம கல்லீரல் நோய்: ஆய்வை தொடங்கிய அமெரிக்கா
உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக குழந்தைகளிடம் பரவும் மர்ம கல்லீரல் நோய்: ஆய்வை தொடங்கிய அமெரிக்கா
இந்த புதிய கல்லீரல் நோய் அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், இஸ்ரேல், டென்மார்க், நெதர்லாந்து, இத்தாலி, நார்வே, பிரான்ஸ், ரோமானியா, ஜப்பான், கனடா, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த புதிய கல்லீரல் நோய் அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், இஸ்ரேல், டென்மார்க், நெதர்லாந்து, இத்தாலி, நார்வே, பிரான்ஸ், ரோமானியா, ஜப்பான், கனடா, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம்(CDC) உலகம் முழுவதும் குழந்தைகளிடம் பரவியுள்ள மர்ம கல்லீரல் வியாதியை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது. இதுவரை 169க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சையில் உள்ள நிலையில், 14 சதவீதம் பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதன் முதல் பாதிப்பு பதிவானதாக அமெரிக்க ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. பாதிப்பு ஏற்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு அடினோவைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகளிடம் இருக்கும் நிலையில், இதுதான் நோய் பாதிப்புக்கு காரணமாக என ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவதாக ஆய்வு அமைப்பின் இணை இயக்குனர் ஜே பட்டலர் கூறியுள்ளார். மேலும், உலக நாடுகளில் முன்னணி நிபுணர்களிடம் தொடர்பு கொண்டு இதன் காரணியை அறிய தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
கோவிட் தொற்று ஓயும் சூழலில் இந்த புதிய நோய் பாதிப்பு கிளம்பியுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இதில் கோவிட் தொற்றுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா எனவும் நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். அத்துடன் கோவிட் லாக்டவுன் காலத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்ட சுணக்கம் இதற்கு காரணமா எனவும் ஆராயப்படுகிறது.
இதையும் படிங்க: 700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தில் நிர்வாண போட்டோ ஷூட் - பாலி தீவில் இருந்து சுற்றுலா பயணி வெளியேற்றம்.
இந்த புதிய கல்லீரல் நோய் அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், இஸ்ரேல், டென்மார்க், நெதர்லாந்து, இத்தாலி, நார்வே, பிரான்ஸ், ரோமானியா, ஜப்பான், கனடா, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
Published by:Kannan V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.