மான் சூட்டில் வெள்ளை மாளிகையில் அட்டகாசம் செய்த நபர் - ட்ரம்ப் தான் அழைத்ததாக பகீர் புகார்!
நீளமான கொம்புகளுடன் மான் போன்ற உடை அணிந்த ஒருவர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.

- News18 India
- Last Updated: January 10, 2021, 11:13 AM IST
நீளமான கொம்புகளுடன் மான் போன்ற உடை அணிந்த ஒருவர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.
அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் இந்த வாரம் நடைபெற்ற கலவர நிகழ்வை அமெரிக்காவின் கருப்பு தினமாக பலரும் வர்ணித்து வருகின்றனர். ட்ரம்பின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த வன்முறை சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு பெண் உட்பட 5 பேர்
கொல்லப்பட்டனர். வெள்ளை மாளிகையின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து மாளிகையின் மேல் ஸ்பைடர் மேன் போன்று ஏறி குதித்து
அங்கிருந்த போடியம் உள்ளிட்ட அதிபர் மாளிகையின் முக்கிய பொருட்களை தூக்கிச் சென்றவர்கள் செய்த அட்டகாசங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகியது.
அதில் குறிப்பாக மான் சூட் அணிந்த ஒருவர் செய்த அட்டகாசம் சமூக வலைத்தளங்களில் மிகுந்த கவனத்தை ஈர்த்தது.
நீளமான கொம்புகள், முகத்தில் அமெரிக்க கொடியின் வண்ணத்தில் பெயிண்டிங் செய்திருந்த அவர் மான் சூட்டில், அமெரிக்க கொடியுடன் வன்முறையில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ மூலம் தெரியவந்தது.
இந்நிலையில் கலவரக்காரர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தது.
இதனிடையே மான் சூட்டில் அட்டகாசம் செய்த நபர் வாஷிங்டனில் உள்ள எஃப்பிஐ தலைமையகத்தை தொடர்பு
கொண்டு பேசியுள்ளார். ஜேகப் அந்தோனி சான்ஸ்லீ என்ற அந்த நபர், அதிகாரிகளிடம் பேசியபோது, தேசபக்தர்கள் அனைவரும் வாஷிங்டனுக்கு ஜன.6 அன்று வரவேண்டும் என்று அதிபர் ட்ரம்பின் வேண்டுகோளை ஏற்று பிற தேசபக்தர்களுடன் இணைந்து அரிசோனாவில் இருந்து வந்ததாக கூறினார். இச்சம்பவத்திற்காக அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யும் முன்னதாக அதிகாரிகளிடம் பேசிய ஜேகப் கூறுகையில், வெள்ளை மாளிகையில் இருந்த நம்பிக்கை துரோகிகள் எங்களை கண்டவுடன் கேஸ் மாஸ்குகளை அணிந்துகொண்டு பாதாள சுரங்கம் வழியே தப்பிச் சென்றதாகவும், இதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் இந்த வாரம் நடைபெற்ற கலவர நிகழ்வை அமெரிக்காவின் கருப்பு தினமாக பலரும் வர்ணித்து வருகின்றனர். ட்ரம்பின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த வன்முறை சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு பெண் உட்பட 5 பேர்
கொல்லப்பட்டனர்.