‘ஆட்டோ பைலட்’ தனி விமானத்தில் 15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு - சிக்கிய கோடீஸ்வரர்

53 வயதாகும் மெல் மூன்று குழந்தைகளின் தந்தை ஆவார்.

news18
Updated: May 22, 2019, 10:53 AM IST
‘ஆட்டோ பைலட்’ தனி விமானத்தில் 15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு - சிக்கிய கோடீஸ்வரர்
மாதிரிப்படம்
news18
Updated: May 22, 2019, 10:53 AM IST
தனக்கு சொந்தமான தனி விமானத்தை ‘ஆட்டோ பைலட்’ மூலம் பறக்கவிட்டு, அதில் 15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதாக 53 வயது கோடீஸ்வரர் சிக்கியுள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்டீபன் ப்ராட்லெ மெல். 53 வயதான இவர் தனக்குச் சொந்தமான தனி விமானத்தில் 15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதாக புகார் எழுந்தது.

விமானத்தை ‘ஆட்டோ பைலட்’ மோட்-ல் இயக்கி, அவர் சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதாக கடந்தாண்டு குற்றச்சாட்டு பதிவானது.


இது தொடர்பான வழக்கு விசாரணையில் குற்றம் இழைக்கவில்லை என்று மெல் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், சாட்சியங்கள் குற்றம் நடந்ததை உறுதி செய்யும் வகையில் இருப்பதால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

53 வயதாகும் மெல் மூன்று குழந்தைகளின் தந்தை ஆவார். தனது வழக்கு விசாரணையில், தான் பல அறக்கட்டளைகள் நடத்தி பலரின் முன்னேற்றத்துக்கு உதவுவதாக மெல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Loading...

669 செக்ஸில் ஈடுபடுங்கள்... ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கிய அலிபாபா ஓனர்!

முகத்தில் கரப்பான் பூச்சி விடும் சேலஞ்ச்

First published: May 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...