ஹோம் /நியூஸ் /உலகம் /

சீனாவிற்கு எதிராகத் திரும்பிய நாடுகள் - ராணுவ பலத்தை ஒன்றிணைக்க ஒப்பந்தம்!

சீனாவிற்கு எதிராகத் திரும்பிய நாடுகள் - ராணுவ பலத்தை ஒன்றிணைக்க ஒப்பந்தம்!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள்

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள்

சீனாவிற்கு எதிராக அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் இணைந்து ராணுவ பலத்தை மேம்படுத்த ஒத்துழைப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, IndiaUnited states of AmericaUnited states of America

  சீனா, உலகின் சக்திவாய்ந்த நாடாக மாற வேண்டும் என்று தொடர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து, உலகின் முக்கிய நாடுகளான அமெரிக்க, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் இணைந்து ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க அங்கீகரித்துள்ளனர்.

  அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

  இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறுகையில், ’தைவான் மேல் சீனா நடத்தும் அத்துமீறல்களும் ராணுவ நடவடிக்கைகளும் கவலைக்குரியதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

  மேலும் அதனை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் இணைந்து ராணுவ பலத்தைப் பசிபிக் பகுதியில் மேம்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

  அமெரிக்க, சீனாவின் அதிகரிக்கும் செயல்பாடுகளைத் தடுப்பதற்காகப் பசிபிக் பகுதியில் இருக்கும் நாடுகளுடன் இணைந்து நட்புணர்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

  Also Read : இன்னும் எவ்வளவு ரத்தம் ஓட வேண்டும்... ரஷ்யா- உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

  அந்த வகையில் பசிபிக் பகுதியில் உள்ள தீவு நாடுகளுடன் உறவை மேம்படுத்த அமெரிக்கா கடந்த வியாழக்கிழமை அன்று 810 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை அளித்துள்ளனர். அதே நேரம், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடந்த வாரம் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Janvi
  First published:

  Tags: America, Australia, Japan