சிரியா மீது அமெரிக்காவின் தாக்குதல் : உலக அமைதிக்கு அச்சுறுத்தல் - ஐ.நா. சபை ஆதங்கம்

news18
Updated: April 15, 2018, 1:11 PM IST
சிரியா மீது அமெரிக்காவின் தாக்குதல் : உலக அமைதிக்கு அச்சுறுத்தல் - ஐ.நா. சபை ஆதங்கம்
ஐ.நா. பாதுகாப்பு பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ்
news18
Updated: April 15, 2018, 1:11 PM IST
சிரியா மீது அமெரிக்க கூட்டுப் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் வேதனை தெரிவித்துள்ளார்

 மேற்கு ஆசியாவில் உள்ள சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. கிழக்கு கட்டா பகுதியில், அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருபவர்கள் மீது சிரியா - ரஷ்ய கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதன்படி கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலின்போது ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டத்தில் குழந்தைகள் உள்பட 70-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் சார்பில், சிரியாவில், ரசாயன ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியை நோக்கி, ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் டமாஸ்கஸ் நகரை நோக்கி 100-க்கும் அதிகமான ஏவுகணைகள் மூலம் தாக்கல் நடத்தப்பட்டது.

இதனிடையே, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடந்ததை தடுத்து நிறுத்த முடியாதது ஏமாற்றம் அளிப்பதாகவும், தற்போதைய தாக்குதல் சம்பவங்களால் உலக அமைதிக்கும் பாதுகாப்பும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலைக் கண்டித்து, ரஷ்யா சார்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சுமார் 2 மணி நேரம் காரசாரமாக நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு ரஷ்யாவின் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ரஷ்யா, சீனா, பொலிவியா நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவளித்த நிலையில் 8 நாடுகள் எதிர்த்து வாக்களித்ததால் தீர்மானம் தோல்வியடைந்தது.
First published: April 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்