’குண்டு வீசுவதாக சொன்னதற்கு மன்னிப்புக் கேட்கிறோம்’- பணிந்த அமெரிக்க ராணுவம்

மோசமான புத்தாண்டு பதிவுக்காக அமெரிக்க ராணுவத்தின் பிரிவு மன்னிப்புக் கோரியுள்ளது.

Web Desk | news18
Updated: January 1, 2019, 6:25 PM IST
’குண்டு வீசுவதாக சொன்னதற்கு மன்னிப்புக் கேட்கிறோம்’- பணிந்த அமெரிக்க ராணுவம்
Image for representation. (Getty Images)
Web Desk | news18
Updated: January 1, 2019, 6:25 PM IST
அமெரிக்காவில் குண்டு வீசி புத்தாண்டு கொண்டாடுவோம் என அமெரிக்க ராணுவம் பதிவிட்ட ஒரு மோசமான ரசனை மிக்கப் பதிவுக்காகத் தற்போது மன்னிப்புக் கோரியுள்ளது.

அமெரிக்காவில் ஒவ்வொரு புத்தாண்டின் போதும் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் கொண்டாடப்படும் புத்தாண்டு நிகழ்வு மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த வகையில் இந்தப் புத்தாண்டு தொடர்பான வாழ்த்துச் செய்தி ஒன்றை அமெரிக்க ராணுவப் பிரிவு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
அந்த ட்விட்டர் பதிவில், ’நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பெரிய ஒளிரும் பந்து காட்சிப்படுத்தப்படும். வேண்டுமானல், அதைவிட மிகப்பெரிய பந்து (குண்டு) வீசத் தயார்’ என்பது போன்ற பதிவு அணுகுண்டுகளை வீசுவது போன்ற ஒரு சிறு வீடியோவையும் இணைத்து அமெரிக்க ராணுவம் பிரிவு பக்கம் வெளியிட்டிருந்தது.
Loading...
இந்தப் பதிவு மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்கள் பலரும் இந்தப் பதிவு ரசிக்கும்படி இல்லை என அமெரிக்க ராணுவத்தை விமர்சனம் செய்ய தற்போது அப்பதிவுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரியுள்ளது அமெரிக்க ராணுவப் பிரிவு.

மேலும் பார்க்க: அரசு மருத்துவரை தாக்கிய புகாரில் பாஜக மாவட்ட தலைவர் கைது
First published: January 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...