Home /News /international /

தைவானுக்கு பில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா - சீனா கடும் எதிர்ப்பு!

தைவானுக்கு பில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா - சீனா கடும் எதிர்ப்பு!

தைவானுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

தைவானுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

போர் பதற்றத்திற்கு மத்தியில் சீனாவை எதிர்கொள்ளும் வகையில் தைவானுக்கு ராணுவ ஆயுதங்கள் வழங்குகிறது அமெரிக்கா.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சீனாவால் அதிகரிக்கும் பதற்றத்தில் மத்தியில் தைவானுக்கு 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை அளிக்க அமெரிக்கா முன் வந்துள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் சீனா அமெரிக்கா இடையே பரபரப்பு காணப்படுகிறது.

    அமெரிக்கச் சபாநாயகர் நான்சி பெலோசி, தைவான் சென்று ஒரு மாதம் கடந்த நிலையில் தற்போது அமெரிக்கா, தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. நான்சி பெலோசி, தைவான் சென்றதைச் சீனா கடுமையாக எதிர்த்தது.

    உலக அரங்கில் சீனா, தைவான் தன்னுடையது என்று காட்சிப்படுத்தி உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் தைவான் தன்னிச்சையாக ஜனநாயகத்துடன் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தைவான் ஜனநாயகத்தை அமெரிக்கா ஆதரிப்பதாகக் கூறியது. இதனைத்தொடர்ந்து சீனா, தைவான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. தைவான் மீது சீனா பொருளாதாரத் தடையைப் போட்டனர். மேலும் தைவானைச் சுற்றி கடுமையான போர் ஒத்திகையை நடத்தியது.

    தற்போது சீனாவின் அதிகரிக்கும் போர் பதற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா ராணுவ ஆயுதங்கள் வழங்குகின்றது. மேலும் அமெரிக்கா, தைவானுக்கு எதிரான ராணுவ செயல்கள் மற்றும் பொருளாதாரத் தடையை நிறுத்துமாறு சீனாவை வலியுறுத்தியுள்ளனர்.

    Also Read : ஆப்கானிஸ்தான் மசூதிக்குள் பயங்கர குண்டுவெடிப்பு... மதகுரு உட்பட 18 பேர் பலி

    தைவானுக்கு வழங்கப்படும் ராணுவ ஆயுதங்களில் 665 மில்லியன் டாலர் மதிப்பிலான ரேடார் முன் எச்சரிக்கை அமைப்பு இடம்பெற்றுள்ளது. இது ஏவுகணைகள் வருவதை முன்னதே அறிய உதவும். மேலும் 355 மில்லியன் டாலர் மதிப்பிலான 60 வகையிலான ஹார்பூன் ஏவுகணைகள் வழங்கப்படுகிறது. இவை எதிர்கொண்டு வரும் கப்பலை வீழ்த்தி முழுக்கடிக்கக்கூடிய அளவு திறன் உடையது.

    அமெரிக்காவின் இந்த செயலுக்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதனை எதிர்கொள்ள போலுமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்காவில் உள்ள சீனா தூதரகம் தெரிவித்துள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: America, Army, China, Taiwan

    அடுத்த செய்தி