ஹோம் /நியூஸ் /உலகம் /

சீனாவிற்கு எதிராக அமெரிக்காவோடு கூட்டணி சேரும் ஜப்பான்..!

சீனாவிற்கு எதிராக அமெரிக்காவோடு கூட்டணி சேரும் ஜப்பான்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சீனாவின் அச்சுறுத்தலால், இரண்டாம் உலகப் போரின் போது அனுகுண்டுகளால் தங்கள் நாட்டையே நிர்மூலமாக்கிய அமெரிக்காவோடு ஜப்பான் கூட்டுச்  சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • intern, Indiataiwantaiwantaiwantaiwantaiwan

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா பல்வேறு அத்துமீறல்களை மேற்கொண் வருவதால் அந்தப் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் சீனாவோடு சுமூகமான உறவில் இல்லை. அதில் ஒன்றுதான் ஜப்பான். தென் சீனக்கடலில் அமெரிக்காவோடு மோதல் போக்கை கடைப்பிடிபப்தோடு, தைவான் விவாகரத்திலும் சீனா அமெரிக்காவை எரிச்சலடையச் செய்து வருகிறது.

தன்னாட்சி நாடாக தன்னை அறிவித்துக் கொண்ட தைவானை தங்கள் நாட்டிற்குட்பட்ட பகுதி எனச் சொல்லி வரும் சீனா, அதோ போல் கிழக்கு சீனக் கடல் பகுதியில் இருக்கும் ஜப்பான் நாட்டிற்குச் சொந்தமான சென்காகு மற்றும் டியாயோ ஆகிய இரண்டு தீவுகளையும் தங்களுக்குச் சொந்தமான பகுதிகள் என்றும் கூறி வருகிறது. இதனால் ஜப்பான் கடும் கோபத்தில் இருக்கிறது. இந்நிலையில் சீனாவின் அத்துமீறலை கட்டுப்படுத்தும் முகமாகத் தான் இப்போது அமெரிக்காவுடனான தனது உறவை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது ஜப்பான் அரசு.

இதன் ஒரு பகுதியாகத் தான் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசியிருக்கிறார். சந்திப்பின்போது இரு தரப்பு ராஜாங்க உறவுகளை இன்னும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஜப்பானின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான NHK World குறிப்பிட்டுள்ளது.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது, அண்மையில் ராணுவ ரீதியிலான தங்கள் நாட்டின் கொள்கை மறு சீரமைப்பு பற்றியும்,  பாதுகாப்பு அம்சங்களுக்காக அதிகப்படியான நிதி ஒதுக்க தங்கள் நாடு முடிவு செய்திருப்பது பற்றியும் கிஷிடோ பைடனிடம் எடுத்துக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், அச்சுறுத்தலை மேற்கொள்வதற்காகவே பாதுகாப்பு முறை நிலைப்பாட்டில் மாற்றங்கள் கொண்வரப்பட்டுள்ளதாகவும் கிஷிடோ விவரித்துள்ளார். தைவான் தொடர்பான விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வேண்டி தன் அவசியம் குறித்தும், அதற்கான இரு நாடுகளின் உறுதி குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தைவான் நாட்டின் தனிததுவம் மற்றும் சுதந்திரத்தை காப்பாற்றுவதற்காகவும், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்கும் முயற்சிகள் மேற்கொள்வதிலும் ஜப்பானும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றி வேண்டியது அவசியம் என வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜப்பானின் பாதுகாப்பு முறை நிலைப்பாட்டில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றும், ஜப்பான் அரசு ராணுவ நடவடிக்கைகளுக்காக ஒதுக்கும் நிதியை அதிகரிக்கும் முடிவால் ஜப்பான் நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தோ-பசிபிக் பிராந்திதிற்குமான பாதுகாப்பு அதிகரிக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்திருப்பதாக வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் அச்சுறுத்தலால், இரண்டாம் உலகப் போரின் போது அனுகுண்டுகளால் தங்கள் நாட்டையே நிர்மூலமாக்கிய அமெரிக்காவோடு ஜப்பான் கூட்டுச்  சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: America, China, Taiwan