அமெரிக்காவில் ஆம்புலன்ஸ் ஆகப் பயன்படுத்தப்படும் விமானம் நோயாளியுடன் பயணித்தபோது விபத்துக்குள்ளாகி மலைப்பகுதியில் நொறுங்கி விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 5 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் நெவாடா, ஸ்டேஜ்கோச் பகுதி அருகில் நோயாளியுடன் பறந்த விமான ஆம்புலன்ஸ் கீழே விழுந்து நொறுங்கியதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, காவல் துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் ஆம்புலன்ஸ் ஆகப் பயன்படுத்தப்படும் விமானம் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. அதில் விமானத்தில் பயணித்த நோயாளி, செவிலியர், விமானி, விமான உதவியாளர் மற்றும் நோயாளியின் உறவினர் என்று 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விமானம் நோயாளியுடன் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே மாயமாகி உள்ளது. அதனைத்தொடர்ந்து, காவல்துறைக்குக் கிடைத்த தகவலின்படி இரண்டு மணி நேரத்திற்குப் பின் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவசரக்கால பயன்பாட்டிற்கு உதவும் விமான ஆம்புலன்ஸ் கேர் ஃப்லைட் என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்திடம் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : ட்விட்டரில் தொடரும் பணிநீக்கம் : மேலும் 200 பேரை வேலையில் இருந்து தூக்கிய எலான் மஸ்க்!
முதற்கட்ட விசாரணையில் அமெரிக்காவில் நிலவும் மோசமான வானிலை காரணத்தினால் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அமெரிக்காவின் தேசிய விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்திவருகிறது. அமெரிக்காவில் தற்போது குளிர்கால புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நோயாளியைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகிப் பயணித்த 5 பேரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ambulance, America, Flight Accident