ஹோம் /நியூஸ் /உலகம் /

பெரிய தவறு செய்துவிட்டோம் - அமெரிக்கா ஒப்புதல் - மன்னிப்பு கோரியது!

பெரிய தவறு செய்துவிட்டோம் - அமெரிக்கா ஒப்புதல் - மன்னிப்பு கோரியது!

US Military

US Military

தாக்குதலில் ஐஎஸ் அமைப்பினர் யாரும் பாதிக்கப்படவில்லை, அவர்களுக்கு பதிலாக அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

காபுல் ட்ரோன் தாக்குதலில் தவறு செய்துவிட்டோம் என ஒப்புக்கொண்டிருக்கும் அமெரிக்கா அந்த தாக்குதலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று தாலிபான்கள் காபுலை கைப்பற்றி ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். தாலிபான்கள் யாரும் எதிர்பாராத வகையில் அரசுப் படைகளை மிக விரைவாகவே வீழ்த்தியதால், காபுலில் இருந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் வெளியேறுவதற்கு போதுமான அவகாசம் கிடைக்கவில்லை. காபுல் முழுதும் தாலிபான்கள் நிறைந்திருந்தனர், மேலும் காபுல் விமான நிலையம் மட்டுமே ஆப்கனை விட்டு வெளியேறும் ஒரே வழியாக இருந்தது.

இந்த சமயத்தில் தாலிபான்களுக்கு பயந்து காபுல் விமான நிலையத்தின் ஓடுபாதையிலும், வெளியேவும் ஆயிரக்கணக்கில் ஆப்கன் மக்கள் குவிந்தனர். அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதனிடையே தாலிபான்களும் ஆப்கன் மக்களை ஆயுதம் காட்டி கட்டுப்படுத்தினர்.

இந்த சூழலில் காபுல் விமான நிலையம் அருகே இரண்டு இடங்களில் அமெரிக்கர்களை குறிவைத்து மனிதவெடிகுண்டு தாக்குதலை ஐஎஸ் கோர்சான் தீவிரவாத அமைப்பினர் நடத்தினர். இதில் 12 அமெரிக்கர்கள் உட்பட 72 பேர் பலியாகினர். இச்சம்பவத்துக்கு காரணமான ஐஎஸ் கோர்சான் அமைப்பினர் மீண்டும் ஒரு முறை காபுல் விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களின் இருப்பிடத்தை குறிவைத்து ட்டோன் தாக்குதலை அமெரிக்க படையினர் நிகழ்த்தினர்.

Also read:  60 வயது பெண்ணை கொலை செய்து சடலத்துடன் உடலுறவு கொண்ட ‘சைக்கோ’ இளைஞர்!

இத்தாக்குதலில் ஐஎஸ் அமைப்பினர் யாரும் பாதிக்கப்படவில்லை, அவர்களுக்கு பதிலாக அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என 10 பேர் பரிதாபமாக பலியாகினர். அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்நிலையில் காபுல் ட்டோன் தாக்குதல் எங்களின் தவறுதான் என அமெரிக்க ராணுவத்தின் மத்திய கமாண்ட் பிரிவின் ஜெனரல் கென்னத் மெக்கன்சி ஒப்புதல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் மேலும் கூறுகையில், ட்ரோன் தாக்குதல் ஒரு சோகமான தவறு என குறிப்பிட்டார்.

“ஆகஸ்ட் 29ம் தேதி வெள்ளை நிற டொயோட்டா கொரோல்லா காரில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக எங்களின் புலனாய்வு பிரிவினர் சந்தேகித்தனர். அந்தக் காரின் நடமாட்டத்தை வைத்து அதில் இருந்தவர்கள் காபுல் விமான நிலையத்தை தகர்க்க திட்டமிட்டவர்கள் என நம்பினோம், 8 மணி நேர துரத்தலுக்கு பிறகு அந்தக் காரை குறிவைத்து தான் ட்ரோன் தாக்குதல் நடந்தது. ஆனால் பரிதாபமாக 7 குழந்தைகள் உட்பட 10 அப்பாவிகள் அத்தாக்குதலில் பலியாகினர்.

Also read:   யூடியூப்பில் மாதம் 4 லட்சம் வருமானம் ஈட்டும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

எங்கள் புலனாய்வு அமைப்பின் பெரிய தவறு இது என கூறியிருக்கும் மெக்கன்சி, அந்தக் காரில் வெடிபொருட்கள் இருந்ததாக நம்பப்பட்டதால் அதை செய்ததாக கூறினார்.

இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரியிருக்கும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு ஏந்த வகையில் இழப்பீடு தருவது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Arun
First published:

Tags: Afghanistan, Taliban