கீழிருந்து மேலாக எழும்பும் அருவி... இயற்கையின் மாற்று அழகைக் காட்டும் வீடியோ!

மேல் எழும்பும் அருவி(Reddit)

நாம் இயற்கையை இன்னும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது இந்த வீடியோ

  • News18
  • Last Updated :
  • Share this:
அருவி என்றால் மேலிருந்து கீழாக மட்டும் தான் கொட்டுமா? கீழிருந்து மேலாகவும் எழும்பும் என இயற்கையின் மாற்று அழகைக் காட்டுகிறது இந்த வீடியோக் காட்சி.

அயர்லாந்து நாட்டில் உள்ளது மொஹெர் குன்றுகள். இங்குள்ள ஒரு அருவிதான் தலைகீழாகக் கீழிருந்து மேல் எழுகிறது. இயற்கையின் அதியத்தைக் காட்டும் இந்த வீடியோக் காட்சி வைரலாகி வருகிறது. புவியீர்ப்பு விசை, இயற்பியல் என அனைத்துக்கும் அப்பாற்பட்டது இயற்கை என்ற வாசகமும் இந்த வீடியோ உடன் வைரலாகி வருகிறது.

கடல் அருகே உள்ள இந்த குன்றுகளின் காற்றின் வேகம் திசை மாறி மோதும் காலகட்டத்தில் இதுபோல் நீர் மேல் எழும்புகிறதாம். இதன் காரணமாகவே இந்த தலைகீழான அருவி ஏற்பட்டுள்ளதாம்.
Waterfall flowing back up the Cliffs of Moher (on the Doolin side) from very strong winds this weekend from r/irelandநாம் இயற்கையை இன்னும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது இந்த வீடியோ என நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் பார்க்க: ‘இந்த’ ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் தொல்லை தரும் வாட்ஸ்அப்..!
Published by:Rahini M
First published: