இந்தியாவின் தலையாய பிரச்னைகளான மாசுபாடு, உழைப்பாளர் திறன், கல்வி மற்றும் வளர்ச்சி சார்ந்த பலவற்றுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியும் என சிகாகோ பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
நியூஸ் 18 உடனான பிரத்யேக பேட்டியில் சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுப்ரதிக் குஹா இதுகுறித்து விரிவாகப் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “முதலில் தூய்மையான நீரைப் பருகுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மாசுபாடுகளைக் குறைக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்காக W2C முறையைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக தொழிற்சாலைகளின் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தி பொதுவெளியில் பொதுமக்களின் பார்வைக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
பெரும் நிறுவனங்களில் அல்லது வீடுகளில் ஏசி அல்லது காற்று சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பயன்படுத்துவது தற்காலிகமாக உதவுமே தவிர மாசுபாடுகளிலிருந்து நிரந்திர தீர்வு தராது. ஆனால், தொடரும் வெப்பநிலை இன்னும் அதிகரிக்குமே தவிர குறையாது. தகுந்த காலநிலை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் பல தொழில்நுட்பங்கள் இதற்கான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு விதிகளை செயலாக்க உதவுகிறது.
அவற்றை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவது பெரிய உதவியாய் இருக்கும். டைனமிக் கண்காணிப்பு முறைகள் மூலம் இந்திய நதிகளை தூய்மைப்படுத்த முடியும்” என்றார்.
மேலும் பார்க்க: கல்யாணமும் வேண்டாம்... குழந்தைகளும் வேண்டாம்!- சிங்கிள்ஸ் வாழ்க்கையை விரும்பும் தென்கொரிய பெண்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mission Paani, Water Scarcity