ஹோம் /நியூஸ் /உலகம் /

உலக நாடுகள் உதவவில்லையென்றால் ஆப்கானிஸ்தான் முற்றிலும் முடங்கும் - ஐ.நா எச்சரிக்கை

உலக நாடுகள் உதவவில்லையென்றால் ஆப்கானிஸ்தான் முற்றிலும் முடங்கும் - ஐ.நா எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் முழுவதும் முடங்கும் நிலையில் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஆப்கானிஸ்தானுக்கு உலக நாடுகள் உதவ முன்வரவில்லை என்றால், அந்நாடு முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஆட்சியாளர்களின் வங்கிக் கணக்குகளை தாலிபான்கள் முடக்கியுள்ளனர்.

  ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர், அந்நாட்டு மத்திய வங்கியில் இருந்த 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா முடக்கியுள்ளது. இதேபோல, 440 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அவசர இருப்புத் தொகையை சர்வதேச கண்காணிப்பு நிதியம் முடக்கியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் சூழல் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தியது.

  அப்போது பேசிய ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா சிறப்பு தூதர் டிபோரா லயன்ஸ், ஆப்கானிஸ்தானில் உள்ள 97 சதவிகித மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் செல்லும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார். அந்நாட்டில் பொருளாதார முடக்கம் ஏற்படும் முன்னர் சர்வதேச நாடுகள் உதவ முன் வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். ஆப்கன் நாணயத்தின் மதிப்பு படுபாதாளத்திற்கு செல்லும் என்றும், உணவுப் பொருட்கள் மற்றும் எரிவாயு விலை நினைக்க முடியாத அளவிற்கு உயரும் என்றும் லயன்ஸ் தெரிவித்தார். ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் அரசிடம் பணம் இல்லை என்றும் அவர் கூறினார்.

  பொருளாதார நடவடிக்கையை மேற்கொள்ள சில காலம் அனுமதி அளிக்க வேண்டும். நெகிழ்வுத்தன்மை மற்றும் உண்மையை நிலைநாட்ட அனுமதி அளித்தால், இம்முறை அவர்கள் மனித உரிமையைக் காத்து பயங்கரவாதத்தை எதிர்ப்பார்கள்.

  கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் ஆப்கானிஸ்தான் அரசு செய்த செலவில் 75 சதவிகிதத்தை கொடுத்து வந்தன. ஆப்கனை விட்டு தப்பிபோடிய முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி உள்ளிட்ட சிலரது மத்திய வங்கி கணக்குகளை தாலிபான்கள் முடக்கியுள்ளனர். முன்னாள் துணை அதிபர், முன்னாள் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தாலிபான்களின் கலாச்சார குழுத் தலைவர் ஆன்மானுல்லா சமன் கனி தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முன்னாள் அமைச்சர்கள், ஆளுநர்கள் உள்ளிட்டோர் மற்ற வங்கிகளில் வைத்துள்ள கணக்குகளை முடக்கவும் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, ஆப்கன் பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்றும், குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே பெண்களின் கடமை என்றும் தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சயத் ஜக்ருல்லா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Afghanistan, Taliban