இந்தியாவில் சமூக ஆர்வலர்கள் கொல்லப்படுகிறார்கள்: ஐ.நா. கண்டனம்

news18
Updated: September 14, 2018, 11:37 AM IST
இந்தியாவில் சமூக ஆர்வலர்கள் கொல்லப்படுகிறார்கள்: ஐ.நா. கண்டனம்
ஐ.நா.சபை
news18
Updated: September 14, 2018, 11:37 AM IST
சமூக ஆர்வலர்கள் கொல்லப்படுவது கைது செய்யப்படுவது, பழிவாங்கப்படுவது உள்ளிட்டவை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வருவதாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் 9வது ஆண்டு அறிக்கையை அதன் தலைவர் ஆண்டானியோ வெளியிட்டுள்ளார். இதில்,

"மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள 38 நாடுகளில் இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம், அரசியல், நிர்வாகம் உள்ளிட்டவை சமூக ஆர்வலர்களை பழிவாங்க தவறாக பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

குற்றங்கள் அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் அல்ஜீரியா, பக்ரைன், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், ஜப்பான், மெக்சிகோ, மொராகோ, மியான்மர், பாகிஸ்தான், ருவண்டா, சவுதி அரேபியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பகிஸ்தான், வெனின்சுலா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் அரசு மற்றும் அமைப்புகளின் ஊழல்களை தட்டிக்கேட்கும் சமூக ஆர்வலர்கள் பழிவாங்கப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர்." என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...