Home /News /international /

மக்களை கொன்று குவித்த ரஷ்யாவுக்கு தண்டனை அளிக்க வேண்டும்- ஐ.நா சபையில் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்

மக்களை கொன்று குவித்த ரஷ்யாவுக்கு தண்டனை அளிக்க வேண்டும்- ஐ.நா சபையில் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்

உக்ரைன் அதிபர் விளாதிமோர் செலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் விளாதிமோர் செலன்ஸ்கி

Ukraine: ரஷ்யாவிற்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தை நிறுவ வேண்டும் என்றும் இந்த நடவடிக்கை அனைத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் ஜெலன்ஸ்கி கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • international, Indiaukraine
    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை தண்டனை அளிக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

    க்கிய நாடுகளின் பொதுச் சபையில் உலகத் தலைவர்களின் ஆண்டு கூட்டம் நடைபெற்றது. அதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது, உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொலை செய்தது, பெண்கள் மற்றும் ஆண்களை சித்ரவதை செய்தது மற்றும் அவமானப்படுத்தியது ஆகிய குற்றங்களுக்காக ரஷ்யாவுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என கூறினார்.

    ரஷ்யாவிற்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தை நிறுவ வேண்டும் என்றும் இந்த நடவடிக்கை அனைத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் ஜெலன்ஸ்கி கூறினார். போருக்கு பிறகு ரஷ்யா அதன் சொந்த சொத்துக்களைக் கொண்டு இழப்பீட்டு தொகை கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் வலியுறுத்தினார்.

    கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை புறக்கணிக்கும் வகையில், ஐரோப்பாவிற்கு எதிராக அணு ஆயுத அச்சுறுத்தலை புதின் விடுத்துள்ளதாக கண்டனம் தெரிவித்தார்.

    மேலும் ஐ.நா.வின் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளை ரஷ்யா வெட்கமின்றி மீறியுள்ளதாக கடுமையாக விமர்சித்தார். அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்துள்ள போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாகவும் பைடன் தெரிவித்தார். .

    இதனிடையே அதிபர் புதினின் ராணுவ அணி திரட்டலுக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டம் வெடித்துள்ளது. உக்ரைனுக்கு எடிதரான போரில் பங்கேற்கும் படி முன்னாள் ராணுவ வீரர்களுக்கு புதின் புதன் கிழமை அழைப்பு விடுத்தார்.

    Read More: நள்ளிரவில் வீட்டில் பற்றிய தீ.. அலெர்ட் கொடுத்து 6பேரின் உயிரை காத்த அலெக்சா கருவி

    அந்நாட்டின் பாதுகாப்புத்துறை 3 லட்சம் வீரர்களை அணி திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை கண்டித்து மாஸ்கோ, உள்ளிட்ட நகரங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
    Published by:Srilekha A
    First published:

    Tags: Russia, Russia - Ukraine, United Nation, Vladimir Putin

    அடுத்த செய்தி