Home /News /international /

இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்: குஜராத் செல்கிறார்

இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்: குஜராத் செல்கிறார்

போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்

Boris johnson's india visit: முதல் நாளான ஏப்ரல் 21ம் தேதி குஜராத் செல்லும் போரிஸ் ஜான்சன், ஏப்ரல் 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் சுற்றுப்பயணமாக ஏப்ரல் 21ம் தேதி இந்தியா வருகிறார். இந்த பயணத்தின் ஒருபகுதியாக அவர் குஜராத் மாநிலம் செல்கிறார்.

    இங்கிலாந்தின் பிரதமராக போரிஸ் ஜான்சன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றார். அதன் பின்னர் இந்தியா வர அவர் இருமுறை திட்டமிட்டிருந்தார். எனினும், கொரோனா பரவல் காரணமாக அவரது பயணம் தடைபட்டது. இந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என்று பேசப்பட்டது.

    எனினும், அப்போது பிரிட்டனில் கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால் இந்த பயணமும் ரத்தானது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று போரிஸ் ஜான்சன் 2 நாள் சுற்றுப்பயணமாக ஏப்ரல் 21ம் தேதி இந்தியா வரவுள்ளார்.

    இதையும் படிங்க: ஆப்கான் மீது பாகிஸ்தான் திடீர் வான்வழித் தாக்குதல் - பொது மக்கள் பலர் உயிரிழப்பு


    ரஷ்ட்ரி பவனில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. பயணத்தின் முதல் நாளான ஏப்ரல் 21ம் தேதி குஜராத் செல்லும் போரிஸ் ஜான்சன், ஏப்ரல் 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.  பிராந்திய மற்றும் சர்வதேச விவாகரங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Boris johnson, India, PM Narendra Modi

    அடுத்த செய்தி