ஓமன் வளைகுடா பிராந்தியத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான ‘எம்வி அஸ்பால்ட் பிரின்சஸ்' என்கிற எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டதாக இங்கிலாந்தை சேர்ந்த கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது.
அந்தப் பதிவில் “பனாமா நாட்டு கொடியுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பலை சுற்றிவளைத்த கடத்தல்காரர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கப்பலுக்குள் நுழைந்து அந்த கப்பலை கடத்தினர். பின்னர் அவர்கள் கப்பலை ஈரானை நோக்கி செலுத்துமாறு கேப்டனுக்கு கட்டளையிட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியத் தொடர்ந்து, உலக நாடுகள் பலவும் மீண்டும் ஈரானை குற்றம் சாட்டி வருகின்றன. ஈரான் கடற்படையினரே இந்த எண்ணெய் கப்பலை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், இது ஈரானுக்கு எதிரான விரோத நடவடிக்கையின் ஒரு பகுதி என கூறி ஈரான் அந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில், எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டதாக தகவல் வெளியான சில மணி நேரங்களுக்கு பின்னர் அந்த கப்பல் விடுவிக்கப்பட்டதாகவும், கடத்தல்காரர்கள் அனைவரும் கப்பலில் இருந்து வெளியேறி விட்டதாகவும் இங்கிலாந்து கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்தது. மேலும் கப்பலில் உள்ள மாலுமிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது. எனினும் இந்த கடத்தல் சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை அந்த நிறுவனம் வழங்கவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஓமன் நாட்டின் மாசிரா தீவிற்கு அருகே அரேபியன் கடலில் சென்று கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான ‘எம்.வி. மெர்சர் ஸ்ட்ரீட்' என்கிற எண்ணெய் கப்பல் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இங்கிலாந்து மற்றும் ருமேனியாவை சேர்ந்த 2 மாலுமிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பை ஏற்காத நிலையில், இந்த தாக்குதலை ஈரான் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
Must Read : கொரோனா தீவிரம் குறைவதால் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிப்பு - கேரள அரசு
அத்துடன் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய கூட்டமைப்பு உள்ளிட்டவையும் ஈரான் மீது குற்றம் சாட்டியுள்ளன. எனினும், ஈரான் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக்கூறி அதை மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.