குண்டு மனிதர்களை வாடகைக்கு விடும் நிறுவனம்.. ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,300 கட்டணம்

Debucari - குண்டு மனிதர்கள்

“Debucari”-ல் பதிவு செய்து கொள்ள நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், 100 கிலோவுக்கு மேல் எடை கொண்ட ஆண், பெண் என இருபாலரும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறுகின்றனர்.

  • Share this:
100 கிலோவுக்கு மேல் எடை கொண்ட குண்டு மனிதர்களை வாடகைக்கு விடும் வினோத நிறுவனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பல்வேறு காரணங்களுக்காக மனிதர்களை வாடகைக்கு அமர்த்துவது ஒன்றும் ஜப்பானியர்களுக்கு புதிது கிடையாது. தங்களை மோசடி செய்யும் இணையின் காதலரை மனம் மாற்றி அவர்களின் காதலை கைவிடச் செய்வதற்காகவும், நிறுவனங்களுக்காக நடுத்தர வயதுடையோரயும் வாடகைக்கு எடுத்து பரபரக்க வைத்த ஜப்பானியர்கள் தற்போது அதிக எடை கொண்ட குண்டு மனிதர்களை வாடகைக்கு விடும் தொழியை தொடங்கி மிரள வைத்திருக்கின்றனர்.

“Debucari” என்ற இந்த புதிய சேவை ஜப்பானில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 கிலோவுக்கும் மேலான மனிதர்களை தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ தங்களிடமிருந்து வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ள அந்நிறுவனத்தார் இதற்காக ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 2000 ஜப்பானிய யென்கள் கட்டணமாக தர வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

(2000 ஜப்பானிய யென்கள் என்பது 18 அமெரிக்க டாலர்கள் அல்லது இந்திய மதிப்பில் 1,300 ரூபாயாகும்.)

“Debucari” என்ற இந்நிறுவனத்தை Mr Bliss என்ற நபர் தொடங்கியுள்ளார். இவர் ஏற்கனவே பிளஸ் சைஸ் நபர்களுக்கான ஆடை நிறுவனமான Qzilla-வை 2017ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

Also Read:   மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு பணமோசடி வழக்கில் 7 ஆண்டுகள் சிறை.. தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

இந்த விநோத சேவை குறித்து Mr Bliss கூறுகையில், குண்டு மனிதர்களை எதற்காக வாடகைக்கு எடுக்க வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். உங்களை விட குண்டான மனிதரை பார்த்து உங்களை நீங்களே நன்றாக உணருவதற்கோ, எடை அதிகம் கொண்ட நண்பருக்கு ஆடை வாங்குவதற்காக செல்லும் போது அதனை உடுத்திப் பார்க்க ஒரு மாடல் தேவை என்றாலோ, டயட் பிளான் குறித்த விளம்பரங்களை எடுப்பதற்கான மாடல் தேவை என்றாலோ இப்படி பல காரணங்களுக்காக உங்களுக்கு குண்டு நபர்கள் தேவை எனும் போது எங்களை அனுகி சேவையை பெறலாம் என வித்தியாசமான கோணத்தில் பதில் தருகிறார்.

Debucari - குண்டு மனிதர்கள்


மேலும் “Debucari” -ன் விளம்பரங்களில் எங்குமே குண்டு நபர்களை அநாகரிகமாகவோ, அவமதிக்கும் வகையிலோ குறிப்பிடவில்லை என்றும் இதனை பாசிட்டிவாகவும், குண்டு நபர்களை அதிகாரப்படுத்தும் வகையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் Mr Bliss கூறினார்.

Also Read:   ‘அப்படி சொல்லாதடா ச்சாரி மனசெல்லாம் வலிக்கிறது’ - மஞ்சரேக்கருக்கு கவுண்டர் கொடுத்த அஸ்வின்

“Debucari”-ல் பதிவு செய்து கொள்ள நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், 100 கிலோவுக்கு மேல் எடை கொண்ட ஆண், பெண் என இருபாலரும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறுகின்றனர்.

இந்த வினோதமான எண்ணம் எப்படி தோன்றியது என Mr Bliss-யிடம் கேட்டதற்கு, தன்னுடய பிளஸ் சைஸ் ஆடை நிறுவனமான Qzillaவிற்கு குண்டு மாடல்களை தேடிய போது மிகவும் சிரமப்பட்டதாகவும் அப்போது தான் இந்த ஐடியா தனக்கு உதித்ததாகவும் கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை முழுவதும் வாடகைக்கு எடுக்கப்படும் நபருக்கே அளிக்கப்படும் எனவும், கார்பரேட்களிடமிருந்து கமிஷனாக பெறப்படும் தொகையை மட்டுமே தாங்கள் எடுத்துக் கொள்வோம் எனவும் Mr Bliss கூறினார்.

Debucari நிறுவனத்திடம் தற்போது ஜப்பானின் தலைநகர் டோக்யோ, ஒசாகா மற்றும் அய்சி போன்ற நகர்களில் உள்ள குண்டு நபர்கள் அதிகளவில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: